செல்ஃபி, ரீல்ஸ் மோகம் இன்று பலரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பலநேரங்களில் அது விபரீதத்தில் முடிகிறது. மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்து உயிரை விட்டவர்கள் இருக்கிறார்கள். அது போன்ற ஒரு விபரீத முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் சிங்கத்தின் வாயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

திருப்பதியில் இருக்கும் வெங்கடேஷ்வரா விலங்குகள் பூங்காவில் மூன்று சிங்கங்கள் இருக்கிறது. இந்த விலங்குகள் பூங்காவிற்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரஹ்லாத்(38) என்பவர் விலங்குகளை பார்க்க வந்தார். அவர் சிங்கங்கள் இருந்த பகுதிக்கு வந்தார். அவர் அங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றார்.

உடனே அங்கு செல்லாதீர்கள் என்று சிங்கத்தை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டு இருந்தவர் தெரிவித்தார். ஆனால் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பிரஹ்லாத் சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறினார். அவரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சிங்கத்தின் காப்பாளர் உள்ளே குதிக்காதே என்று சத்தம் போட்டார். ஆனால் அவரது எச்சரிக்கையை மீறி சிங்கம் இருந்த கூண்டுக்குள் பிரஹ்லாட் குதித்துவிட்டார். அவர் உள்ளே குதித்து சிங்கத்தை கோபப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார்.

உடனே சிங்கம் அந்த நபரை தாக்க ஆரம்பித்தது. பிரஹ்லாத் அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால் சிங்கம் அந்த நபரின் கழுத்தை கடித்து கூண்டின் ஒரு ஓரத்திற்கு இழுத்துச்சென்று கடித்து குதறியது. அதற்குள் சிங்கத்தின் காப்பாளரும் மற்றவர்களும் ஓடி வந்து சிங்கத்தை அங்கிருந்து விரட்டினார். பலத்த காயத்துடன் பிரஹ்லாத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் இறந்துபோனார். அவரிடம் இருந்த ஆதார் கார்டு மூலம் அவர் யார் என்று அடையாளம் காணப்பட்டது. அவர் கூண்டுக்குள் குதிக்கும்போது மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிரஹ்லாதை தாக்கிய சிங்கம் உடனே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. மூன்று சிங்கத்தில் ஒரு சிங்கம் மட்டும் மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவது வழக்கம். மற்ற இரண்டு சிங்கம் எப்போதும் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் என்று பூங்கா அதிகாரி செல்வம் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.