சென்னை அண்ணனூர், ஸ்ரீசக்திநகர், திருக்குறள் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (66). இவரின் மனைவி சியாமளா (44). இவரின் அம்மா விஜி மோனி. மாதவன், சியாமளாவின் மகள் தீக்சிதா. இவர் பருத்திப்பட்டு பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10.2.2024-ம் தேதி மாதவனும் அவரின் மாமியார் விஜிமோனியும் வீட்டிலிருந்தனர். சியாமளாவும் அவரின் மகள் தீக்சிதாவும் கடைக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் சியாமளாவும் அவரின் மகளும் வீடு திரும்பினர். இந்தச் சமயத்தில் முகத்தில் மங்கி குல்லா அணிந்தப்படி மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவர், டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜிமோனியை திடீரென சரமாரியாக வெட்டினார். அதைப்பார்த்த சியாமளா உள்ளிட்டவர்கள் அறையை விட்டு வெளியில் வந்து சத்தம் போட்டனர். அதனால் அந்த மர்ம நபர் சியமளாவை வெட்டினார். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு திக்சிதா வெளியில் வந்தார். அவரையும் அந்த மர்ம நபர் வெட்டி விட்டு தப்பி ஓடினார். மூன்று பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் மூன்று பேரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொலை

மாதவன் எங்கே என்று தேடியபோது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், மாதவனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிகிச்சை பெற்று வரும் சியாமளாவிடம் விசாரித்தார். விசாரணையில் சியாமளா, மாதவனின் இரண்டாவது மனைவி என்று தெரியவந்தது. மாதவன், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் அதிகாரியாக வேலை செய்து விட்டு ஓய்வு பெற்றவர். தற்போது வீட்டின் மாடியில் மினி பார்ட்டி ஹால் கட்டி அதை நிர்வகித்து வந்தார்.

மாதவனின் மூத்த மனைவி சித்ரகலா. இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். சித்ரகலாவுக்கும் மாதவனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் 2004-ம் ஆண்டு தனியார் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் சியாமளாவை மாதவன் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு பிரமோனிகா, தீக்சிதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரமோனிகா, ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இந்தச் சூழலில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. மாதவனைக் கொலை செய்து விட்டு மற்றவர்களை கொலை செய்ய முயன்ற மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர் யாரென்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஆள்நடமாட்டம் உள்ள குடியிருப்பில் நடந்த இச்சம்பவம் அண்ணனூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை

இதுகுறித்து அண்ணனூர் போலீஸார் கூறுகையில், “மாதவனைக் கொலை செய்த நபர் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்து வந்திருக்கிறார். அதனால் அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை. மேலும் முன்பக்கமாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பின்பக்கமாக தப்பி சென்றிருக்கிறார். அதனால் மாதவனின் வீடு குறித்த தகவல்கள் அந்த மர்ம நபருக்கு தெரிந்திருக்க வேண்டும். மர்ம நபர் தப்பிச் சென்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சிகிச்சை பெற்று வரும் சியாமளா அளித்த தகவலின்படி கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்திருக்கிறோம். மர்மநபர் சிக்கினால் மட்டுமே கொலை, கொலை வெறி தாக்குதலுக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.