பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மகள் இரா கானுக்கு ஜனவரி 3-ம் தேதி உடற்பயிற்சியாளர் நுபுர் சிகாரே என்பவருடன் மும்பை பாந்த்ரா தாஜ் லேண்ட் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 13) இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மும்பையில் நடக்கவிருக்கும் இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஆமிர் கான் மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாருக் கான், சல்மான் கான், அம்பானி, கபூர் குடும்பம், பட் குடும்பம், தியோல் குடும்பம் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரா கான்- நுபுர் சிகாரே

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 2500-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தனது விருந்தினர்களை மகிழ்விக்க பல விதமான உணவுகளை விருந்தளிக்க ஆமிர் கான் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

குஜராத்தி, லக்னோவி, மகாராஷ்டிரா போன்ற 9 மாநில உணவு வகைகள் விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீத்தா அம்பானியின் கலாசார மையத்தில்தான் இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.