`பிக் பாஸ்’ தமிழ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பலரும் இவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரவர் சாய்ஸ்களை கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீடு

`பிக் பாஸ்’ வீட்டில் மாயா – பூர்ணிமாவுடனான நட்பு குறித்து சரவண விக்ரமின் தங்கை `Freeze task’-ன் போது பேசியிருப்பார். பிறகு வீட்டிலிருந்து வெளியேறும் வகையில் சரவண விக்ரம், மாயா தனக்கு துரோகம் செய்துவிட்டது போலவே ரியாக்ட் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில்,  மீண்டும் வீட்டிற்குள் சென்ற சரவண விக்ரம் மாயாவிடம் `சாரி மாயா’ எனக் கூறி மீண்டும் நட்பைத் தொடர்ந்தார். சரவண விக்ரமின் தங்கை சூர்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

சரவண விக்ரம் – சூர்யா

`உங்களுடைய குடும்பத்தினரைவிட வேறொருவருக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ எனப் பதிவிட்டிருக்கிறார். இதனைப் பலரும் சமூகவலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் பிக் பாஸ் போட்டியாளர்களுக்காக வாக்கு கேட்கத் தொடங்கி இருக்கின்றனர். மக்கள் வாக்குகள் அடிப்படையில் டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதனால் போட்டியாளர்களுக்காக ஓட்டுக் கேட்பதைத் தொடங்கியுள்ளனர் பி ஆர் டீம்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

மக்களுடைய அபிமானத்தைப் பெற்ற சில இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் பிக் பாஸ் போட்டியாளருக்காக வாக்குகள் சேகரிப்பதைப் பார்த்து `நீங்களுமா?’ என நக்கலாக கமென்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ, `கப்பு முக்கியம் பிகிலு!’ என சில போட்டியாளர்கள் வெறித்தனமாக புரமோஷன்களில் இறங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

`பிக் பாஸ்’ வீட்டினுள் தினேஷ் – விசித்ரா இருவருக்குமிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. விசித்ரா தினேஷ் – ரச்சிதாவின் பர்சனல் லைஃப் குறித்து பேசியதற்கும் சில விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழ்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய விசித்ரா மீண்டும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக அந்த வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

விசித்ரா, தினேஷ்

ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ` உண்மையில் முக்கியமானது என்னவென்றால் இதயங்களை வெல்வது! என் அன்பை வென்றீர்கள். உண்மையில் என் அன்பை மட்டுமல்ல என் ஆன்மாவையும் வென்றீர்கள்’ எனக் குறிப்பிட்டு விசித்ராவை டேக் செய்திருக்கிறார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.