வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

ஒரு பெண் இந்தியாவின் சிறந்த செஃப் ஆகற முயற்சியில் சந்திக்கும் சவால்களே கதை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்த நயன். சிறுவயதில் இருந்து உணவு சமைப்பதில் தீவிர ஆசையும் சமையலின் மீது தீராக் காதலும்கொண்டவர் .

annapoorani

இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆன சத்யராஜ் போல் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு அவர் வளர்ந்த சூழல் தடை.போட நண்பன் பர்ஹானாவின் (ஜெய் ) ஊக்கத்தில் சென்னைக்கு சென்று படிக்கச்செல்கிறார். அங்கு ஒரு வேலையிலும் சேர்கிறார். வேலை பார்க்கும் இடத்தில் …சத்யராஜின் மகன் அவரின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்க…அதை அன்னபூரணி எப்படி தகர்த்து செஃப்ஆகிறார் என்பதுதான் மீதிக் கதை.

“ஒருவரின் உணவுத் தேர்வு என்பது அவரது விருப்பமாக இருக்க வேண்டும். மதம் சார்ந்து இருக்கக் கூடாது. உணவை சுவையாக மாற்றும் ஒரே விஷயம் அன்பு மட்டும்தான்” போன்ற விஷயங்களைத் தொட்டதற்காகவும் ,

தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை அதிகம் பேசப்படாத கேட்டரிங் துறையை கதைக்களமாக கொண்டதற்காகவும் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவை மனம் திறந்து பாராட்டலாம் .( இதுவரைவந்த படங்களிலெல்லாம் அத்தகைய காட்சிகள் சொற்ப நிமிடங்களே வந்து போனது நாம் அறிந்தது தான்) தமனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை சூப்பர் . (அசத்த வரா.. கலக்க வரா பூரணி..) நயனுக்காகவே அமைந்த தீம் இசை அசத்தல்.

annapoorani

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் சமையல் மேக்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் அசத்தல்.(ரொம்ப விரிவாக காட்டாமல் சுருக்கமாக காட்டி இருப்பது அருமை)

ஆசையும், லட்சியமும்இருந்தால் மட்டும் போதாது அதற்கான முயற்சியும் தீவிரமாக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்ற நயனின் கதாபாத்திரம் (புதிதாக) வாழ்க்கையில் முயற்சிப்பவர்களுக்கு மிகச்சரியான உதாரணம்.. அதிலும் கிளைமாக்ஸில் அவர் செய்யபோற பிரியாணிக்கு ‘நமாஸ் ‘செய்து பிறகு ஆரம்பித்தது.. அதற்கான விளக்கத்தை நடுவர்களிடம் சொன்னது.. கைதட்ட வைத்தது (நான் அந்த சீனில் என்னை அறியாமல் கைதட்டினேன் இயக்குனரின் வித்தியாசமான பாராட்டதக்க முயற்சி ) அன்னபூரணிபோல தன்னம்பிக்கை மிக்கவளாக நாமும் இருக்க வேண்டும் என அந்த நிமிடத்தில் அனைவருக்கும் தோன்றியிருக்கும். சமையல் என்று சாதாரணமாக சொல்லி விடுகிறோம் ஆனால் அந்த சமையலை காதலன் சமைத்து தீராக் காதலுடன்பரிமாறி பாருங்கள் ..வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக மாறும் என்பதை அழகாக சொன்னது அன்னபூரணி

annapoorani

பிரியாணிக்கு ஏது மதம் அது ஒரு எமோஷன்”

“எந்த கடவுளும் கறி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லல”

“உன் உணவு உ ன்னோட உரிமை”போன்ற முற்போக்கான வசனங்கள் படத்தின் பிளஸ்..

இந்து, இஸ்லாமியரை இணைக்கும் இடங்களாக உணவை முன்னிறுத்தியது ..செம..

லட்சியம் மின்னும் கண்களுடன் கரண்டி பிடிப்பது, தன்னிலையை விவரிக்க போராடுவது, சமையல் மீதான காதலை வெளிப்படுத்துவது, அசைவத்தை நெருங்கும் காட்சிகளில் தயங்குவது,(குடும்பப் பின்னணி தாண்டி அசைவ உணவு சமைப்பது, சுவைப்பது) அப்பாவின் அங்கீகாரத்துக்காக ஏங்குவது , வருத்தமான தருணங்களில் உடைந்து அழுவது என அன்னபூரணியாகவேநயன்! , வாழ்ந்திருக்கிறார்.

படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் அன்னபூரணி பூரணமாக தெரிந்(ஜொலித்)திருப்பாள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.