ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக்பேஷ் லீகில் `எலக்ட்ரா ஸ்டம்ப்’ என்ற பெயரில் புதிதாக ஒருவித ஸ்டம்ப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். எலக்ட்ரா ஸ்டம்ப் என்றால் என்ன? அதில் என்ன ஸ்பெஷல்?

BBL

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் எப்போதும் அந்தத் தொடரை சுவாரஸ்யமாக மாற்ற பல புதுவிதமான விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஐ.பி.எல் மற்றும் சர்வதேச போட்டிகளில் லைட் எறிவதைப் போன்ற ஸ்டம்புகளைப் பார்த்திருப்போம். லைட்டுடன் கூடிய இந்த ஸ்டம்புகளை முதலில் பிக்பேஷ் லீகில்தான் பயன்படுத்தினார்கள். அங்கே நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகுதான் மற்ற தொடர்களிலும் அந்த ஸ்டம்பைப் பயன்படுத்தினார்கள். போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே பவுண்டரி லைனில் நிற்கும் வீரரை மடக்கிப் பிடித்து பேட்டி எடுப்பது, இது 11 பேர் ஆட வேண்டிய ஆட்டம் அல்ல, 12-வதாக ஒரு ஆளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது, X Factor விதியை அறிமுகப்படுத்தியது என வருடா வருடம் எதையாவது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

IPL Trophy

பிக்பேஷைப் பார்த்துதான் ஐ.பி.எல்-இல் இம்பாக்ட் ப்ளேயர் விதியையே அறிமுகப்படுத்தினார்கள். கமர்ஷியலுக்காகப் பல விஷயங்களும் செய்வதால் இந்தத் தொடர் பிடிக்கவில்லை எனக் கூறியே ஷேன் வாட்சன் பிக்பேஷிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இப்போது புதிதாக ‘எலக்ட்ரா ஸ்டம்ப்’ என்ற ஒன்றை பிக்பேஷ் லீக் அறிமுகப்படுத்தியிருக்கிறது. லைட் எறியும் ஸ்டம்ப்பின் இன்னொரு வடிவம்தான் இது. இதில் ஒரு லைட்டிற்குப் பதிலாக விக்கெட், பவுண்டரி, சிக்ஸர் என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான லைட்டுகள் எரியும். விக்கெட் விழும்பட்சத்தில் ஸ்டம்ப் முழுவதும் சிவப்பு லைட் எறிந்து தீ எரிவதைப் போன்ற ஒளி வெளிப்படும்.

பவுண்டரி அடித்தால் பல வண்ணங்கள் மாறி மாறி எறியும். அதேமாதிரி சிக்ஸர் அடித்தால் பல வண்ணங்கள் ஸ்டம்பில் கீழிருந்து மேலாகச் செல்லும். நோ-பால் எனில் சிவப்பும் வெள்ளையயும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் வரும். அதேமாதிரி ஓவர் இடைவேளைகளில் பர்ப்பிளும் நீலமும் மேலும் கீழுமாக மாறி மாறி வரும்.

போட்டிகளைக் கண்கவர் பொழுதுபோக்காக மாற்றும் வகையில் செய்யப்படும் இந்த மாற்றங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.