தமிழ்நாடு தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் எனப் பல்வேறு துறைகளுக்கான உற்பத்தி மையமாக இருக்கிறது.

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தில் மகாராஷ்டிரா இருந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி

இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை முந்தி உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்துக்கு வந்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

சில பிரபல ஊடகங்களும்கூட இந்த செய்தியைப் பதிவு செய்திருக்கின்றன. உண்மையிலேயே பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம் முந்திவிட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.

பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசம் முந்திவிட்டதாக சமூக வலைதளங்களும், சில ஊடகங்களும் பகிர்ந்துள்ள தகவல், soic.in என்ற இணைதளத்தில் பகிரப்பட்டுள்ள வரைபடம் அடிப்படையில் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது அடிப்படையற்ற, அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல் என்று தெரிய வருகிறது.

மாநில பொருளாதாரம்

மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி (GSDP) நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களைப் பார்த்தோம். அதில், மகாராஷ்டிராவுக்கான பொருளாதாரம் பற்றிய விவரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 23.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் 22.57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

கர்நாடகாவின் பொருளாதாரம் 22.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

ஆக, மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, பொருளாதாரத்தில் உத்தரப் பிரதேசத்தைவிட அதிகமாக தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு இருப்பது உறுதியாகிறது.

மேலும், ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில், 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 28.3 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மதிப்பு வெறும் 24.39 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கும் என்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது!

மாநில பொருளாதார வளர்ச்சி கணிப்பு

குஜராத் பொருளாதாரம் 25.62 லட்சம் கோடி ரூபாயாகவும், கர்நாடகாவின் பொருளாதாரம் 25 லட்சம் கோடி ரூபாயாகவும் , உயரும் எனவும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.