உணர்ச்சிகளுக்கு எளிதில் அடிமையாகாதவர் நீங்கள். எவராலும் உங்களைத் துல்லியமாகக் கணிக்க இயலாது. பகைவர்களால் உங்களை வீழ்த்துவதும் எளிதல்ல. நீண்ட ஆயுளுடனும் சிறந்த புகழுடனும் வாழும் அமைப்பு உடையவர்.

ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும்

வாக்கியப்படி டிசம்பர் 20 அன்று நிகழும் சனிப்பெயர்ச்சியின்படி, உங்கள் ராசிக்குள் வந்து ஜன்மச் சனியாக அமரவுள்ளார் சனி பகவான். நட்சத்தர சஞ்சாரப்படி அவர் உங்கள் ராசிக்கு தரப் போகும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

கும்பம்

20.12.2023 முதல் 22.02.2024 வரை, உங்கள் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத் தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு.

23.02.2024 முதல் 15.03.2025 வரையிலும் ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் வீட்டில் சுபகாரியங்கள் கைகூடி வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை தொடர்பான தடைகள் யாவும் நீங்கும். வீட்டுக்குத் தேவையான நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும்.

சனிபகவான்

16.03.2025 முதல் 06.03.2026 வரையிலும் உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இந்தக் காலக்கட்டங்களில், சகல விஷயங்களிலும் இழுபறி நிலை மாறும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்திலும் வெளி வட்டாரங்களிலும் உங்களின் மதிப்பு உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.