‘Big Billion day Sale’ எனும் Flipkart-ன் வருடாந்திர சிறப்பு ஆன்லைன் விற்பனை திட்டத் தினங்களில், தன்னிடம் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மிகப் பெரிய அளவில் தள்ளுபடிகளை வழங்கி விற்பனை செய்வது e-commerce நிறுவனமான Flipkart- நிறுவனத்தின் வழக்கமாகும். இந்த நிலையில் சமீபத்தில் Flipkart-ன் ‘Big Billion day Sale’-ன்போது, பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் Flipkart -ல் ஷாம்பூ ஒன்றை வங்கியிருக்கிறார்.

ஃப்ளிப்கார்ட் | Flipkart

ஆனால், அவர் வாங்கிய ஷாம்புவிற்கு, அதன் சில்லறை விற்பனை விலையை (MRP) விட அதிகமாக இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். இது தொடர்பாக பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் Flipkart-ன் மீது வழக்குத் தொடர்ந்தார். Flipkart தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “Flipkart-ன் வாதங்கள் திருப்பியளிக்கக் கூடியதாக இல்லை. Flipkart நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

எனவே, Flipkart சேவை குறைபாட்டுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், ஷாம்புவிற்கு என கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும்” என Flipkart நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாடிக்கையாளர் முழுப் பணத்தையும் முன்கூட்டியே செலுத்திய பின்பும், அவருக்கு முறையாக ஆர்டரை டெலிவரி செய்யத் தவறியதற்காகப் பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இதே e-commerce நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.