மும்பையைச் சேர்ந்த அமித் போஸ்லே என்பவர், திருமண இணையதளம் ஒன்றில் தனது பெயரைப் பதிவுசெய்திருந்தார். அதில் பெண் நீதிபதி ஒருவரின் பெயரும் மணப்பெண் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. உடனே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, கோரிக்கை அனுப்பினார் அமித். அவர் கோரிக்கை அனுப்பியவுடன் அந்தப் பெண்ணும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருவரும் சில தினங்கள் பேசினர். திடீரென அந்தப் பெண் தனக்கு அவசரமாக ரூ.7,000 ஆன்லைனில் அனுப்பும்படியும், அடுத்த நாள் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

இணையதளம்

ஆனால், `ஆன்லைனில் மோசடி நடப்பதால் ,பணத்தை யாரிடமாவது கொடுத்து அனுப்பட்டுமா?’ என்று அமித் கேட்டார். இதனால் போனில் பேசிய அந்தப் பெண் கோபமாகி, திட்டினார். உடனே அந்த நபர் பாந்த்ராவிலுள்ள கோர்ட்டுக்குச் சென்று நீதிபதி குறித்து விசாரித்தார். ஆனால் அங்கு நீதிபதியாக வேறு ஒருவர் இருந்தார். உடனே இது குறித்து அமித் அங்கிருந்த கோர்ட் ஊழியர்களிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

போலீஸார் சொன்னபடி போனில் பணம் கேட்ட பெண்ணிடம், யாரையாவது அனுப்பிப் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி அமித் கேட்டுக்கொண்டார். அதன்படி பணம் வாங்க வந்த இரண்டு பேரை போலீஸார் மடக்கிப்பிடித்து, கைதுசெய்தனர். அவர்களது பெயர் சங்கத் சவான், சுசில் மோடி (67) என்று தெரியவந்தது. சிறையிலிருந்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் சிறையிலிருந்து வெளியில் சென்றவுடன், எப்படி மோசடி செய்யலாம் என்பது குறித்துத் திட்டமிட்டனர்.

அதன்படி திருமண வெப்சைட் ஒன்றை ஆரம்பித்து, அதில் பெண்களின் போலி புரொஃபைல்களை உருவாக்கினர். அவற்றைப் பார்த்து தொடர்புகொள்பவர்களிடம், சங்கத் சவான் பெண் போன்று மிமிக்ரியில் பேசுவது வழக்கம். அவர்கள் பேச ஆரம்பித்து ஓரிரு நாள்களில் அவசரமாகச் சிறிது பணம் தேவை என்று கூறி, 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை சங்கத் கேட்பது வழக்கம். அந்தத் தொகையை ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்யும்படி கேட்பது வழக்கம்.

நாம்தான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப்போகிறோமே என்ற எண்ணத்தில், போனில் பெண்போல் பேசுபவர் சொல்லும் நம்பருக்குப் பணத்தை அனுப்பிவைப்பார்கள்.

குறைந்த தொகையைக் கேட்டு வாங்கிக்கொண்டு ஏமாற்றினால், அதற்காக யாரும் காவல் நிலையத்துக்குச் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், குறைந்த தொகை கேட்பதை இரண்டு பேரும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். அதோடு போனில் பேசும் நபர் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், `நான் வேலையில் பிஸியாக இருக்கிறேன். எனவே, என்னுடைய சகோதரனையும் மாமாவையும் முதலில் அனுப்பிவைக்கிறேன்’ என்று பெண் குரலில் பேசும் நபர் தெரிவிப்பார்.

அதற்கு அந்த நபர் சம்மதம் தெரிவித்துவிட்டால், உடனே சங்கத், சுசில் மோடி ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட நபரைச் சந்தித்து, பேசுவது வழக்கம். வாய்ப்பு இருந்தால் பெண் பார்க்க வருபவரிடம் கூடுதல் பணத்தை மோசடி செய்துவிடுவது வழக்கம். இருவரும் சேர்ந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்திருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.