2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை

இது தொடர்பாக,  சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் ,மானுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக வரும் சனிக்கிழமை (டிசம்பர் 2) நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு  சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, சேலம் நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். 

நீதிபதி ஜெயச்சந்திரன்

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணக்கு வந்தபோது, அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர்கள் C.V.ஷியாம் சுந்தர், V.வணங்காமுடி, R.பரமசிவம், சஞ்சய் ராமசாமி ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அண்ணாமலையின் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி,  பியூஷ் மானுஷ்-க்கு   உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4 -ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.