பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. ஆனால், சர்வதேச நாடுகளின் இஸ்ரேல் எதிர்ப்பு போர் நிறுத்தக் குரலுக்கும், இஸ்ரேல் ஆதரவுக் குரலுக்கும் இடையே காஸாவில் நாள்தோறும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்

இதுவரை, இரு தரப்பிலும் 11,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், பாலஸ்தீனத்தில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனாலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் `இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம்’ என்று வெளிப்படையாகக் கூறிவருகிறது.

இந்த நிலையில், புலம்பெயர்ந்தோர், போராட்டக்காரர்கள், காவல்துறை மீதான ஆத்திரமூட்டும் கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman), பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக காவல்துறை இரட்டை வேடம் போடுவதாகக் கூறியதைடுத்து, பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியான இவரை, தனது சொந்த கட்சியிலிருந்து வந்த அழுத்தத்தால் பிரதமர் ரிஷி சுனக் இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

சுயெல்லா பிராவர்மேன்

முன்னதாக, நவம்பர் 8-ம் தேதியன்று `தி டைம்ஸ்’ பத்திரிகை, நவம்பர் 11-ல் நடைபெறவிருந்த வலதுசாரி குழுவினரின் போராட்டம் தொடர்பாக `போராட்டங்களில் காவல்துறை சமமாக இருக்க வேண்டும்’ என சுயெல்லா பிராவர்மேன் எழுதிய கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், சுயெல்லா பிராவர்மேன், “போராட்டத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் வலதுசாரி மற்றும் தேசியவாத போராட்டக்காரர்கள் அதற்குச் சரியான கடுமையான எதிர்வினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இதே நடவடிக்கையை வெளிப்படுத்தும் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள், சட்டத்தை மீறினாலும் கூட கண்டுகொள்ளப்படுவதில்லை. காவல்துறையின் இத்தகைய நிலைப்பாடு குறித்து, ஓய்வுபெற்ற, பணியிலிருக்கும் அதிகாரிகளிடம் நான் பேசினேன். போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்பிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தர்.

ரிஷி சுனக்

சுயெல்லா பிராவர்மேனின் இத்தகைய சர்ச்சைக் கருத்தால், அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அவரது சொந்தக் கட்சியினரே பிரதமர் ரிஷி சுனக்குக்கு அழுத்தம் கொடுத்தனர். இத்தகைய சூழலில்தான், சுயெல்லா பிராவர்மேனை ரிஷி சுனக் பதவி நீக்கம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.