முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ், இஷா, ஆனந்த் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மூவருக்கும் சம்பளம் கிடையாது. ஆனால் கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என்று நிறுவனம்  கூறியுள்ளது.

ஏற்கனவே முகேஷ் அம்பானி 2020-21 நிதியாண்டு முதல் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறுவதில்லை. இந்நிலையில் அவரது வாரிசுகளும் சம்பளம் பெறாமல் கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான கட்டணம் மற்றும் நிறுவனத்தின் லாபத்தில் இருந்து கிடைக்கும் கமிஷன் மட்டுமே பெறுகின்றனர்.

சம்பளமே இல்லையெனில் இவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற கேள்வி எழலாம்… 

2014-ம் ஆண்டு அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 2022 -23 நிதியாண்டில் இயக்குநர் குழு கூட்டத்தில் பங்கேற்றதற்காக 6 லட்சமும், நிறுவனம் பெற்ற லாபத்தின் அடிப்படையில் 2 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. சமீபத்தில் இந்த பொறுப்பில் இருந்து நீதா அம்பானி விலகினார்.

Money

அதனைத் தொடர்ந்து அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதச் சம்பளம் இல்லை என்பதால் நீதா அம்பானியை போலவே இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.