இன்றைய நாளில் முதல் தங்கம்!
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா மூவர் அடங்கிய அணி 1734 புள்ளிகள் பெற்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது!
வுஷு: வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி
60 கிலோ எடைப்பிரிவுக்கான வுஷூ ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி சீனாவின் வூ சியோவிடம் வீழ்ந்தார். வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்!