புது உடை, புது பைக் எனப் புதிதாக நமக்கு என்ன கிடைத்தாலும் கொண்டாடுவோம். அதையேதான் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகையிலும் மனது செய்யும். ஆனால், கொண்டாட்டம் தொடர சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. 

புதிதாக ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம். 

இது உங்கள் முதல் ரிலேஷன்ஷிப்பாக இருக்கலாம் அல்லது ஆறாவதாக இருக்கலாம். அது விஷயமே இல்லை. முதலில், முந்தைய ரிலேஷன்ஷிப்பை உங்கள் தோல்வியாக நினைக்காதீர்கள். பிரேக் அப் செய்துவிட்டதால் அதைத் தவறெனவும் நினைக்கத் தேவையில்லை.

முந்தைய ரிலேஷன்ஷிப்களைப் பற்றி பார்ட்னரிடம் சொல்லிவிட வேண்டுமா என்றால், ஆமாம். அதுதான் பாதுகாப்பான விஷயம். மறைப்பதால், பின்னால் பிரச்னைகளுக்குத்தான் கொண்டு செல்லும். 

இன்னொன்று… பழைய ரிலேஷன்ஷிப்போடு இந்தப் புதிய ரிலேஷன்ஷிப்பை ஒப்பிடாதீர்கள். அதை மட்டும் எப்போதும் செய்யாதீர்கள்.

எந்த ரிலேஷன்ஷிப்பிலும் முதல் சில மாதங்கள் மிக முக்கியம். அதுவரை சற்று தூரத்திலிருந்து இருவர் வாழ்க்கையையும் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் நெருங்கி வரும்போது கண்ணில் படாத பல விஷயங்கள் தெரியும். அவற்றைச் சரியாக எதிர்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் முக்கியம்.

ரிலேஷன்ஷிப்பில் நாம் நினைப்பவை மட்டுமே நடக்குமென சொல்லவே முடியாது. கசப்பான நிகழ்வுகள் நடந்தால் அதைப் பற்றிய உங்கள் மனநிலையை உடனே பார்ட்னரிடம் சொல்லிவிடுங்கள். 

`என் கூட இருக்கிறப்ப மொபைல் தேவையில்லாம யூஸ் பண்ணாத’, போன்ற உங்களை உறுத்தும் விஷயங்களைச் சரியான காரணத்துடன் டிஸ்கஸ் செய்யலாம். இருவரும் விவாதித்து ஒரு முடிவை எட்டலாம். 

உங்கள் பார்ட்னரை மட்டுமே அதிகம் சந்தித்த நீங்கள் இனி அவர் குடும்பம், நண்பர்கள் என நிறைய பேரைச் சந்திக்க நேரிடலாம். இனிமையான தருணங்களை மட்டுமே கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை சின்னச் சின்ன கசப்பான மொமென்ட்களைக் கொடுக்கத் தொடங்கலாம். 

anger

இருவரும் மற்ற எல்லாவற்றையும்விட உங்கள் காதலுக்கென அதீதமாகக் கொடுத்த கவனமும் நேரமும் ரிலேஷன்ஷிப்புக்குள் சென்ற பின் கொஞ்சம் மிஸ் ஆகலாம். நீங்கள் கற்பனை கூட செய்திடாத ஒரு முகத்தை உங்கள் பார்ட்னரிடம் பார்க்கலாம்.

couples

புதிய ரிலேஷன்ஷிப் என்றானதும் இதற்கெல்லாம் தயாராக இருப்பது உங்கள் ரிலேஷன்ஷிப் நீண்டகாலம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

love

இறுதியாக, ஓர் ஆணின் உண்மையான இயல்பு என்பது அவனிடம் அதிகாரம் இருக்கும்போது வெளிப்படுவதுதான்; போலவே ஒரு பெண்ணின் உண்மையான இயல்பு என்பது எந்தப் பிரச்னையும் இல்லாதபோது வெளிப்படுவதுதான். எல்லா விதியும் போல இதற்கும் விதிவிலக்குகள் இருக்கலாம். 

couple

உங்கள் பார்ட்னரைப் பற்றி இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தச் சூழலில் கூடுதல் கவனத்துடன் பாருங்கள். ஆரம்பகட்டத்தில் அதிகமாகவே பாருங்கள். அது பல ஏமாற்றங்களைத் தவிர்க்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.