நேற்று இரவு நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், 9 சீரிஸ் ஆப்பிள் வாட்ச், வாட்ச் அல்ட்ரா 2, iOS17 உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Double tap Gesture

எதிர்பார்த்தபடியே  ‘A17’ பயோனிக் சிப், ‘S9 சிப்’, ‘ஆக்‌ஷன் பட்டன்’, ‘டைட்டானியம் பில்ட்’ போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐ வாட்ச்சில் சர்ப்ரைஸாக விரல்களால் டேப் செய்து கால் எடுப்பது, கட் செய்வது, பாஸ்-ப்ளே உள்ளிட்ட பல அம்சங்களைச் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. இப்படி நேற்றைய ஆப்பிள் ஈவென்ட்டில் என்னென்ன கேட்ஜெட்கள் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் என்னவெல்லாம் ஸ்பெஷல் என்று விரிவாகப் பார்ப்போம்!

ஐ வாட்ச் 9 சீரிஸ் மற்றும் அல்ட்ரா 2

இந்த இரண்டு வாட்ச்களிலும் புதிய S9 SiP சிப் பொருத்தப்பட்டுள்ளது. S8 SiP-ஐ விட அதிக செயல்திறன் கொண்ட சிப் என்பதால் ‘ECG’-கெனத் தனி ஆப், ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ள ‘Blood Oxygen’ தனி ஆப் என தனித்தனியான மேம்படுத்தப்பட்ட ஆப்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விபத்து நேரங்களில், அவசர காலத்தில் பயன்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் கூறுகிறது.

இரண்டு கைவிரல்களை ஒன்று சேர்த்து சின் முத்திரைப் போல் வைத்தாலே டேப் ஆகும் புதிய ‘Double tap gesture’ அம்சமும் இரண்டு புதிய வாட்ச்களிலும் சார்ப்ரைஸாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐவாட்ச்: ‘Gyroscope’, ‘Accelerometer’ சென்சார்கள்

இதைப் பயன்படுத்தி கால் எடுப்பது, கட் செய்வது, பாஸ்-ப்ளே உள்ளிட்ட பல வித்தைகளைச் செய்யலாம். S9 SiP-ல் வாட்ச்சின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ‘Gyroscope’, ‘Accelerometer’ என்ற இரண்டு சென்சார்களும் விரல்களால் மணிக்கட்டில் ஏற்படும் அழுத்தங்களுக்கு ஏற்ப இந்த வேலையைச் செய்து முடிக்கிறது.

ஐ வாட்ச் 9 சீரிஸ் மற்றும் அல்ட்ரா 2

நமக்குத் தேவையான எந்தவொரு வசதியையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ‘ஆக்‌ஷன் பட்டன்’ இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பைவிடவும் பகலில் அதிக பிரைட்னஸ் மற்றும் இரவில் பயன்படுத்த குறைந்த பிரைட்னஸ் என டிஸ்பிளே கொஞ்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காலநிலையை முடிந்த அளவிற்கு துல்லியமாக அறியவோம் சென்சார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர ‘Nike’, ‘Hermes’ நிறுவனத்துடன் இணைந்து மறுசுழற்சி செய்யும் வகையிலான பல புதிய டிசைன்களில் ஐவாட்ச்களுக்கான லெதர் மற்றும் நைலான், சிலிக்கான் ஸ்டாராப்களையும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் விலை ₹41,900 முதல் ஆரம்பமாகிறது. அல்ட்ரா 2 விலை ₹89,900 முதல் ஆரம்பமாகிறது.

ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ்

இதில், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் பயன்படுத்தும் அதே ‘A16′ பயோனிக் சிப் புதிய ஐபோன் 15 மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அதே பேட்டரி மற்றும் சூடாகும் பிரச்னை இருக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், செயல்திறனில் குறை இருக்காது. கேமராவைப் பொறுத்தவரை 48MP மெயின் கேமரா, 2X வரை டெலி போட்டோ எடுக்கலாம். 60 FPS-ல் 4K HDR வீடியோ எடுக்கலாம். போட்டோ எடுத்தப்பின் போக்கஸை எந்த சப்ஜக்ட்டுக்கும் மாற்றிக் கொள்ளலாம். ஐபோன் 15; 6.1’ இன்ச் மற்றும் 15 ப்ளஸ்; 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. 2000 nits கொண்ட ‘Super Retina XDR’ டிஸ்பிளேவுடன் இவை வருகின்றன.

ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ்

பலரும் எதிர்பார்த்தது போல ‘USB Type C’ போர்ட் இம்முறை ஐபோன்களுக்கும் வந்துவிட்டது. ஆனால, திடமான உறுதித்தன்மையுடைய பிரைடட் கேபிள் இம்முறையும் வரவில்லை.

இந்த போன் கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

விலை

ஐபோன் 15:  128GB- ₹79,900/-, 256GB- ₹89,900/-, 512GB- ₹1,09,900/-

ஐபோன் 15 ப்ளஸ்: 128GB- ₹89,900/-, 256GB- ₹99,900/-, 512GB- ₹1,19,900/-

ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ்

ஹைஎண்ட் மாடல்களான ஐபோன் 15 ப்ரோ மற்றும 15 ப்ரோ மேக்ஸ் இரண்டிலும் ஆப்பிளின் புதிய ‘A17’ ப்ரோ பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ‘A16’ சிப்பைவிட பல மடங்கு அதிக செயல்திறன் கொண்ட சிப்பாக இது இருக்கும் என ஆப்பிள் கூறுகிறது. 48MP மெயின் கேமரா, 12 MP வைடு கேமரா மற்றும் 12MP, 5X வரை 120 mm ஆப்டிக்கல் ஜூம் கொண்ட டெலி போட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 4K/60fps ProRes ஃபார்மேட்டில் வீடியோ எடுக்கலாம்.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ்

ஆட்டோமேட்டிக் கலர் கரக்‌ஷன் செய்ய ‘ACES’ சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பைவிட சென்சார் 25 சதவிகிதம் பெரிதாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை 6.1 மற்றும் 6.7 இன்ச் அளவிலான ‘ProMotion’ 120Hz டிஸ்பிளேக்கள் கொடுக்கப்படவுள்ளது. பெஸல்ஸ்: 2.17mm – 1.71mm என்றும் எடை: 187g -206g எனவும் குறைக்கப்பட்டிருக்கிறது. அலுமினியத்துக்கு பதிலாக டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டதாலேயே இந்த மாற்றம்.

விலை:

ஐபோன் 15 ப்ரோ: 128GB: ₹1,34,900/-, 256GB: ₹1,44,900/-, 512GB: ₹1,64,900/-, 1TB: ₹1,84,900/-

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்: 256GB: ₹1,59,900/-, 512GB: ₹1,79,900/-, 1TB: ₹1,99,900/-

இதன் விற்பனை செப்டம்பர் 22-ம் தேதியும், முன்பதிவு (வெள்ளிக்கிழமை) செப்டம்பர் 15-ம் தேதியும் ஆரம்பமாகிறது.

iOS17 மற்றும் Sonoma

ஆப்பிள் போன்களுக்கான புதிய iOS17 மற்றும் மேக்புக்குக்கான ‘Sonoma’ ios இயங்குதளங்கள் புதிதாக அறிமுகமாகியுள்ளது. புதிய  iOS17க்கான அப்டேட் இன்று முதலே பல ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு வரத் தொடங்கிவிட்டது. மேக்புக்குக்கான ‘Sonoma’ அப்டேட் செப்டம்பர் 26-ம் தேதி வரும் எனக் கூறப்படுகிறது.

சூரிய ஒளி மூலம் மின்சாரம்

ஆப்பிள் 2030

மின்சாதனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியால் உண்டாகும் கார்பன் எமிஷன் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் சூரிய ஒளி, காற்று மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரங்களைக் கொண்டே ஆப்பிள் தங்களது எல்லா சாதனங்களின் உற்பத்தியை முழுவதுமாக செய்யவேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கப்போகிறதாம் ஆப்பிள். உலகெங்கிலும் பல காற்றாலைகள், சோலார் நிலையங்களை 2030-ம் ஆண்டிற்குள் அமைத்து ஆப்பிளின் உற்பத்தியில் 100 சதவீதம் கார்பன் நியூட்ரல் இலக்கை அடைவதைப் பெரும் கனவாகக் கொண்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஆப்பிள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.