தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸும், தி.மு.க-வும் ஓரணியில் நின்றாலும்கூட, கர்நாடக காங்கிரஸ் அரசோ தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை தரமறுக்கிறது. காங்கிரஸ் என்றில்லாமல், தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கும் பா.ஜ.க-கூட, கர்நாடகாவில் ஆட்சியிலிருந்தபோது தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் தரவில்லை.

காவிரி நீர்

ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடக திறந்துவிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும்கூட, அங்கு ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் `எங்களிடமே போதிய அளவு தண்ணீர் இல்லை’ என்று கடமைக்கு குறைந்தளவு தண்ணீரைத் திறந்துவிடுகிறது. இந்த ஆண்டும், தற்போது திறந்துவிடவேண்டிய 53.77 நீரில் 37.97 டி.எம்.சி நீரை கர்நாடக இன்னும் திறந்துவிடாமல் இருக்கிறது.

இப்படியிருக்க, காவிரியிலிருந்து வினாடிக்கு 24,000 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய சித்தராமையா, “தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால், நாங்கள் நீதிமன்றத்தில் வாதிடுவோம்.

முதல்வர் சித்தராமையா – கர்நாடகா

ஆனால், தமிழகம்-கர்நாடகாவுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், 2018-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தமிழக அரசின் இந்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மேலும், பொதுவாக ஓராண்டுக்கு 177.25 டி.எம்.சி நீரைத் திறந்துவிடவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், நெருக்கடியான நிலை என வரும்போது, எது நெருக்கடி என்பதே இங்கு இன்னும் வரையறுக்கப்படவில்லை” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.