பிரக்ஞானந்தா தோல்வி!

கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்றில் 47 வது மூவில் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினார் பிரக்ஞானந்தா. இரண்டாவது சுற்று போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கிறது. அதில், பிரக்ஞானந்தா வென்றே ஆக வேண்டும்.

முடிந்தது 20 மூவ்கள்!

முதல் நகர்வு!

பிரக்ஞானந்தா – கார்ல்சன் இருவரும் 20 மூவ்களை முடித்திருக்கின்றனர். இருவரும் ராணி மற்றும் இரண்டு சிப்பாய்களை இழந்திருக்கின்றனர். பிர்கஞானந்தா ஒரு குதிரையும் ஒரு மந்திரியையும் இழந்திருக்கிறார். கார்ல்சன் இரண்டு மந்திரிகளை இழந்திருக்கிறார். ஆட்டம் இதுவரை சமமாக சென்று கொண்டிருக்கிறது.

பிரக்ஞானந்தா முதல் மூவாக சிப்பாயை தூக்கி e4 இல் வைத்திருக்கிறார். பதிலுக்கு கார்ல்சன் சிப்பாயை தூக்கி e5 இல் வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தை மார்டன் பிஷன் ஓப்பனிங்கில் கொண்டு சென்றனர்.

கருப்பு…வெள்ளை..

டை பிரேக்கரில் ரேபிட் ஆட்டத்தின் முதல் சுற்றில் கார்ல்சன் கருப்பு காய்களுடனும் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும் ஆடி வருகிறார்.

பரபர இறுதிப் போட்டி வெல்வாரா பிரக்ஞானந்தா?

பிரக்ஞானந்தா Vs கார்ல்சன்:

அஜர்பைஜானின் பகுவில் நடைபெற்று வரும் FIDE உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கார்ல்சனை எதிர்த்து ஆடிக்கொண்டிருக்கிறார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளும் டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இப்போது தொடங்கி நடந்து வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.