பரபரப்பாக நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் இரண்டு சுற்று ஆட்டங்களும் சமன் ஆன காரணத்தால் இப்போது போட்டி டை-பிரேக்கர் ஆட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.

இப்போது டை-பிரேக்கர் எவ்வாறு நடைபெறும் என்பதைப் பற்றியும் டை-பிரேக்கரிலேயே ஆட்டம் டை ஆகினால் என்னவாகும் வெற்றியாளரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

Praggnanandha Vs Carlsen

நாளை முதலில் நடக்கும் டை-பிரேக்கரில் இருவருக்கும் 25 நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் ஒவ்வொரு மூவிற்கும் 10 விநாடிகள் இன்கிரிமென்ட் ஆகும். இந்த நேர அளவைக் கொண்டு இரண்டு சுற்று போட்டிகள் நடைபெறும். அதில் இருவரும் ஒரு முறை வெள்ளை மற்றும் கருப்புக் காய்களைக் கொண்டு விளையாடவேண்டும். இதில் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். இந்த டை-பிரேக்கரிலும் இருவரும் சமபுள்ளிகள் பெற்றிருந்தால் இன்னொரு டை-பிரேக்கர் சிறிதுநேரம் கழித்து நடைபெறும்.

Praggnanandha

இது இரண்டாவது டை-பிரேக்கர் . இதில் இருவருக்கும் 10 நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் ஒவ்வொரு மூவிற்கும் 10 விநாடிகள் இன்கிரிமென்ட் ஆகும். இந்த நேர அளவைக் கொண்டு இரு போட்டிகள் நடைபெறும். அதில் இருவரும் ஒரு முறை வெள்ளை மற்றும் கருப்புக் காய்களைக் கொண்டு விளையாட வேண்டும். இதில் யார் அதிகப் புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். இந்த டை-பிரேக்கரிலும்இருவரும் சம புள்ளிகள் பெற்றிருந்தால் இன்னொரு டை-பிரேக்கர் சிறிது நேரம் கழித்து நடைபெறும்.

இது மூன்றாவது டை-பிரேக்கர். இருவருக்கும் 5 நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் ஒவ்வொருமூவிற்கும் 3 விநாடிகள் இன்கிரிமென்ட் . இந்த நேர அளவைக் கொண்டு இரண்டு சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.அதில் இருவரும் ஒரு முறை வெள்ளை மற்றும் கருப்புக் காய்களைக் கொண்டு விளையாட வேண்டும்.இதில் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். இந்த டை-பிரேக்கரிலும் இருவரும் சம புள்ளிகள் பெற்றிருந்தால் இன்னொரு டை-பிரேக்கர் சிறிதுநேரம் கழித்து நடைபெறும்.

Carlsen

இது நான்காவது டை-பிரேக்கர். முதல் மூன்று டை-பிரேக்கர்களும் சமனில் முடிந்தால் இந்த டை-பிரேக்கர் நடைபெறும். இருவருக்கும் 3 நிமிடங்கள் கொடுக்கப்படும். இதில் ஒவ்வொரு மூவிற்கும் 2 விநாடிகள் இன்கிரிமென்ட். இந்த நேர அளவைக் கொண்டு ஒரு போட்டி நடைபெறும்.இதில் வெற்றி பெறுபவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். இந்த ஆட்டத்திலும் சமன் அடைந்தால் அவர்கள் அந்த ஆட்டத்தில் ஆடிய நிறத்திற்கு மாறான நிறத்தில் இன்னொரு ஆட்டம் விளையாடவேண்டும்.

Praggnanandha Vs Carlsen

தொடர்ந்து சமன் அடைந்தால் யாராவது ஒருவர் வெற்றி அடையும் வரை இந்தப் போட்டி தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடத்தப்படும். ஆக, இன்றைய நாளிலேயே வெற்றியாளர் யார் என்பது உறுதியாக தெரிந்துவிடும்.

வெல்லப்போவது யார் கார்ல்சனா பிரக்குவா? உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.