Automatic Landing Sequence (ALS) – இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ!

இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ!
இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ!

சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் பரபரப்பான இறுதிக்கட்டப் பணிகளுக்கு இஸ்ரோ தயாராகிவிட்டது. மாலை 05:44 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும். உடனே லேண்டரின் இன்ஜின்கள் உயிர்பெற்று, அதனை நிலவை நோக்கி கீழே இறக்கத் தயாராகிவிடும். முழுக்கத் தானியங்கி முறையில் நிகழும் இந்தப் பயணம் Automatic Landing Sequence (ALS) என்று அழைக்கப்படுகிறது. 

விக்ரம் லேண்டரில் என்னென்ன மாற்றங்கள்? அது என்ன செய்யப்போகிறது?

* நிலவில் இறங்கும் நேரத்தில் தன் வேகத்தை சீரமைத்துக்கொள்ளும் வசதி விக்ரம் லேண்டரில் இருக்கிறது. முன்பைவிட அதிக எரிபொருளும் இதில் இருப்பதால், தன் பாதையையும் வேகத்தையும் மாற்றிக்கொண்டு இது எளிதில் இறங்க முடியும்.

* பழைய விக்ரம் லேண்டரில் ஐந்து இன்ஜின்கள் இருந்தன. அப்போது லேண்டரின் மையத்தில் இருந்த இன்ஜினை இப்போது அகற்றிவிட்டனர். இம்முறை விக்ரம் லேண்டரில் நான்கு இன்ஜின்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் திறன் முன்பைவிட அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர்

* 1,750 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் தன் நான்கு கால்களையும் அழுத்தமாகப் பதித்து நிலவின் பரப்பில் இறங்கி நிற்க வேண்டும். இந்த எடையைத் தாங்கும் அளவுக்கு இதன் கால்கள் இம்முறை வலுவாக அமைக்கப்பட்டுள்ளன.

* தான் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பதை, நிலவின் பரப்பை ஆராய்ந்து லேண்டரே முடிவு செய்துகொள்ளும். இறங்க வேண்டிய இடத்தை இரண்டு முறை அது ஆராய்ந்து பார்க்கும். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தைவிட, அருகில் வேறொரு பாதுகாப்பான இடத்தை அது கண்டறிந்தால், அதுவாகவே இடம் மாறி இறங்கிவிடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் – 1, சந்திரயான் – 2-வில் கற்ற பாடங்கள்!

* சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எங்கு இறங்குவது பொருத்தமாக இருக்கும் என்பதை பல தகவல்களை வைத்து ஆராய்ந்தார்கள். முந்தைய சந்திரயான் – 1, சந்திரயான் – 2 விண்கலங்கள் சேகரித்த தகவல்கள், ஜப்பானின் SELENE ஆர்பிட்டர் அனுப்பிய தகவல்கள், அமெரிக்காவின் Lunar Reconnaissance Orbiter சேகரித்த தகவல்கள் ஆகியவற்றை வைத்து இடங்களைத் தேர்வு செய்தார்கள்.

சந்திரயான் 2

* முதல் கட்டமாக 20 இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டன. சந்திரயான் – 2 பயணத்தின்போது செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் இன்னமும் நிலவை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதுவும், ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆர்பிட்டர்களும் நிலவை ஆராய்ச்சி செய்து எடுத்த அதிநவீன படங்களை வைத்து, எட்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டன.

* சந்திரயான் – 2 அனுப்பிய லேண்டர் கடைசி நேரத்தில் நிலைதடுமாறி நிலவில் மோதியதை பாடமாக எடுத்துக்கொண்டு இம்முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்போது போனதும் விக்ரம் லேண்டர்தான். அதில் ஒரே ஒரு நேவிகேஷன் கேமரா இருந்தது. இம்முறை போகும் விக்ரம் லேண்டரில் இரண்டு கேமராக்கள் உள்ளன.

க்ளைமாக்ஸை நெருங்கும் சந்திரயான் 3!

சந்திரயான் 3

நிலவின் பரப்புக்கு 30 கி.மீ மேலே இருக்கும் சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர், தன் பயணத்தின் க்ளைமாக்ஸை நெருங்குகிறது. அந்த நிகழ்வின் லைவ் அப்டேட்ஸை இங்கே காணலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.