ஆனந்த விகடனும் King Maker IAS அகாடமியும் இணைந்து பல்வேறு இடங்களில் வெற்றிகரமான நிகழ்வை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப்போல வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவசப் பயிற்சி முகாமை சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தவிருக்கிறது.

காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். இந்த முகாமில் சிறப்புரை அளிப்பதற்காக சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் திரு. தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், போட்டித் தேர்வு பயிற்றுநர் டாக்டர். சங்கர சரவணன், King Makers IAS அகாடமியின் இயக்குநர் திரு.சத்ய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் திரு.தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், 2005-ல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2011 ஆம் ஆண்டு இவர் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பல முயற்சிகளை முன்னெடுத்து வெற்றி கண்டிருக்கிறார்.

தாரேஷ் அகமது

அதுமட்டுமல்லாமல் குழுந்தைத் திருமணத்தை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்துப் பல பெண்களின் வாழ்விற்கு உதவிகரம் நீட்டியுள்ளார். இச்செயலைப் பாராட்டி 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி இவரை அடையாளப்படுத்தினார். இப்படியான ஆளுமையும் இந்த இந்த இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்புரையாற்றவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்றுநர் Dr.சங்கர சரவணன் தமிழார்வமும் தகவலார்வமும் அதிகளவில் கொண்டவர். மாணவர்களுக்கு உதவும் வகையில் பலதுறைச் சார்ந்த பொது அறிவுத் தகவல்களை எளிய தமிழில் எழுதுவதில் நாட்டம் கொண்டவர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் நடத்தும் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று, உத்தர பிரதேசத்திலுள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றவர்.

சங்கர சரவணன்

இவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். போட்டித் தேர்வுகளுக்காக இதுவரை விகடன் பிரசுரத்தில் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டவுள்ளார்.

இந்த முகாமில் கலந்துக் கொள்வதற்கு அனுமதி இலவசம்.முன்பதிவு அவசியம் !.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.