இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அரசுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் அனுபவித்தனர். சிறையில் கொடுமைகளை எதிர்கொண்டனர். எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜ.க அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

பிரதமர் மோடி

இந்த நிலையில், எமர்ஜென்சி காலத்தில் நடந்தவைகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, “அந்தக் காலத்தை மறக்கவே முடியாது” என தெரிவித்திருக்கிறார். இது குறித்தது தனது ட்வீட்டர் பக்கத்தில், “எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். எமர்ஜென்சியின் இருண்ட நாள்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.