இன்றைய டிஜிட்டல் யுகத்தில் `வாட்ஸ்அப்’ மிக முக்கியமாக சாட்டிங் செயலியாக கோலோச்சி வருகிறது.

வாட்ஸ்அப்பின் வருகைக்குப் பிறகு பல சாட்டிங் செயலிகள் டெக் மார்க்கட்டிற்கு வந்தாலும் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இன்றுவரை பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். இருப்பினும், தரம் குறையாத ‘lossless’ போட்டோக்களை இதன் மூலம் அனுப்ப முடியாதது இதில் பெரும் குறையாகவே இருந்து வந்தது. இதற்காகவே பலரும் வேறு பல செயலிகளையும், பல்வேறு மூன்றாம் தர முறைகளையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றனர்.

‘Document’ஆக வாட்ஸ்அப்பில் படங்களைத் தரம் குறையாமல் அனுப்பலாம் என்றாலும் அது என்ன படம் என்பதை அறிய ஒவ்வொன்றையும் டவுன்லோடு செய்துதான் பார்க்கவேண்டும் என்ற சிக்கல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நீண்ட நாள்களாக இருந்து வந்த இந்த ‘HD படப்பகிர்வு’ குறையைச் சரிசெய்ய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப். இதன் மூலம் இனி ‘HD – 2268×4032’ ரிசொல்யூசனில் தரம் குறையாத போட்டோக்களை அனுப்பலாம். இந்தப் புதிய அப்டேட் இப்போதைக்கு ‘IOS’ மற்றும் ‘ஆண்ட்ராய்டு பீட்டா’ வெர்சனில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. முழுமையான பரிசோதனைக்குப் பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தப் புதிய வசதி செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.