மதுரை மக்களே மறுபடியும் வந்துட்டோம்!

சத்யா மற்றும் அவள் விகடன் இணைந்து நடத்தும் `அவள் ஜாலி டே’ – வாசகிகளின் திருவிழா. இந்த முறை புத்தம் புதிதாக அசத்தலாக நடைபெற உள்ளது.

பெண்களுக்கான தனித்திறமைகளையும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவத்தையும் வெளிப்படுத்த மாபெரும் வாய்ப்பு. போட்டிகள், பரிசுகள், ஃபன் நிகழ்ச்சிகள் என பெண்களுக்கே பெண்களுக்காக ஒருநாள்.

ரங்கோலி போட்டி…

எங்கு… எப்போது?

இதுவரை இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சி தற்போது ஒரேநாளாக மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, தல்லாகுளத்தில் அமைந்துள்ள லட்சுமி சுந்தரம் ஹாலில், காலை 9 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு, காலை 8 மணிக்குத் தொடங்கும்.

நிகழ்ச்சி அல்ல திருவிழா!

பெண்கள் பங்கேற்க 5 போட்டிகள், 2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள், ஸ்லோகன் போட்டியில் பங்கேற்று ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் 25 கிராம் வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு… இதுமட்டுமல்ல, ஆன் தி ஸ்பாட் போட்டிகள், பம்பர் பரிசு, பங்கேற்கும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு எனப் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

அவள் ஜாலி டே

இதுமட்டுமா?

பஞ்சுமிட்டாய், 90s கிட்ஸ் மிட்டாய், பாப்கார்ன், கோன் ஐஸ்க்ரீம், மெஹந்தி, இன்ஸ்டன்ட் டாட்டூ என திருவிழாக் கோலம் காணவிருக்கிறது மதுரை அவள் விகடன் ஜாலி டே!

என்னென்ன போட்டிகள்?

பாட்டு, நடனம்,, ரீல்ஸ், ரங்கோலி, அடுப்பில்லா சமையல் ஆகிய 5 போட்டிகள் நடைபெறும். ஒரு நபர் இரண்டு போட்டிகளில் பங்கேற்கலாம்.

விதிமுறைகள்

பாட்டு – தங்களுக்குப் பிடித்தமான எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடலாம். ஒரு நபருக்கு அதிகபட்சம் 3 நிமிடங்கள் கொடுக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

நடனம் – தங்களுக்குப் பிடித்தமான எந்த வகையான நடனத்தையும் ஆடலாம். ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 நிமிடங்கள் கொடுக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

ரீல்ஸ் – நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தலைப்பு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ற ரீல்ஸை போட்டியாளர்கள் உருவாக்க வேண்டும். வீடியோ கன்டென்ட் ஒரு நிமிடத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

Vijay Tv Fame Kuraishi

ரங்கோலி – கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்த ரங்கோலியை வரையலாம். ரங்கோலி போட்டிக்குத் தேவையான பொருள்களை போட்டியாளர்களே எடுத்து வர வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சம் 45 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

அடுப்பில்லா சமையல் – தேவையான பொருள்களைப் போட்டியாளர்களே எடுத்து வர வேண்டும். எந்த உணவையும் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துவரக்கூடாது. நிகழ்விடத்துக்கு வந்து உணவைத் தயாரிக்க வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் கொடுக்கப்படும்.

* போட்டிகளைப் பொறுத்தவரையில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

Fun with Kuraishi!

ஜாலி டே நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கவும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் விஜய் டிவி பிரபலம் குறைசி கலந்து கொள்ளவிருக்கிறார். நிகழ்ச்சியைத் கலகலப்பாகத் தொகுத்து வழங்கவிருக்கிறார் தர்ஷூ. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அள்ள அள்ள பரிசுகள் என அவள் விகடனோடு இணைந்து அனைத்து கவலைகளையும் மறந்து, கொண்டாட ஒரு பொன்னான வாய்ப்பு.

மறந்தும் மிஸ் பண்ணிடாதீங்க!

அவள் விகடன் ஜாலி டே

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆண்களுக்கு அனுமதி இல்லை!

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.