“உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது” – 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலரான பாபு என்பவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும் அறக்கட்டளை வாயிலாக நாங்கள் செய்திருக்கும் நலப் பணிகளுக்கான வரவு-செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்துவருகிறோம்

அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 27-ம் தேதி அன்று வெளிவந்த ஒரு பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகிறது. ஊடகம், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப்போல் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. மேலும், அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்துக்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்துக்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதைச் சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொண்டு களப்பணி ஆற்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்

பேருந்து கவிழ்ந்து விபத்து…!

அமிர்தசரஸிலிருந்து ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள கத்ராவை நோக்கிச் சென்ற பேருந்து ஜம்மு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக ஜம்மு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.