தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவருக்கு தொடர்புடையதாக கூறப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

இதன் ஒருபகுதியாக கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த தகவல் கிடைத்ததும் திமுகவினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் சிலர் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டு கூச்சலிட்டனர். பின்னர் நடந்த தள்ளுமுள்ளில் 4 அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அசோக் குமார் என்பவர் யார்?

இரட்டை இலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த கரை வேட்டிகள் சிலர், “தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒரே தம்பி தான் இந்த அசோக் குமார். அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் பலரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றம் நடந்து வருகிறது. திமுகவுக்கு வந்த பிறகு அந்த கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையெல்லாம் ஒருங்கிணைத்து செய்தவர் அசோக் குமார் தான்.

திமுக சின்னம்!

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அசோக்குமார் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள் உள் விவரம் அறிந்த சிலர். சமீபத்தில் கூட கரூர் கம்பெனி ஆட்கள் டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதிலும் அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருவது குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்தனர். அவர்கள் தங்களது கடுமையான விமர்சனத்தை இந்த விவகாரத்தில் முன்வைத்தனர்.

டாஸ்மாக் கடை

இதையடுத்து சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு பின்னாலும் அசோக் குமாரும் அவரது ஆதரவாளர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

இதையடுத்து டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் அசோக் குமார். அங்கு வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ள தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்” என்றனர் விரிவாக.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்

செந்தில் பாலாஜியின் முதுகெலும்பே அசோக் குமார் தான். தற்போது அவரை குறி வைத்து வருமான வரித்துறை ஆய்வு மூலமாக தனது அஸ்திரத்தை செலுத்தியிருக்கிறது, டெல்லி. இந்த அஸ்திரத்தின் குறி தவறுமா அல்லது சரியாக இலக்கை தாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.