கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “வருமானவரித்துறை சோதனை ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூர் பொதுக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான்.’ என கூறினார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர்.எஸ் பாரதி கூறுகிறார்.

அண்ணாமலை

இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் ஆர்.எஸ் பாரதி ஏதேனும் விவாதத்தை முன் வைத்தாரா. அப்போதெல்லாம் எதுவும் கூறாமல் செந்தில் பாலாஜி என்று வரும்போது விவாதம் செய்கிறார் என்றால் பணம் இருந்தால் அவர்களுக்கு திமுகவில் மரியாதை என்று மக்களுக்கு புரிகிறது.

இந்த வருமானவரித்துறை சோதனை ஓரிரு நாள்களில் முடிவது போல் தெரியவில்லை. தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. திமுக ஃபைல்ஸ் (DMK FILES) இரண்டாம் பாகம் விரைவில் வெளியிட உள்ளோம். அது முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான். `என் மண் என் மக்கள்’ என்ற பயணம் ஜூலை 9-ம்தேதி தொடங்க உள்ளது.

செந்தில் பாலாஜி

அந்தப் பயணத்தில் ஊழலைப் பற்றி மட்டும் தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும்போதும் அங்குள்ள திமுகவின் ஊழலைப் பற்றித்தான் பேசப் போகிறோம். திமுக பைல்ஸ் 2-ல் திமுகவைச்  சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள்.

பாஜக வெளியிடும் ஊழல் பட்டியலுக்கும், மத்திய அரசின் சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாஜகவை சின்னக் கட்சி என்று சொன்னார்கள்.  மேலும் நாங்கள் எல்லாம் பாஸ் கிடையாது. எங்கள் பாஸ் டெல்லியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். வருகின்ற காலத்தில் யார் பாஸ்.. யார் பாஸ் இல்லை என்று தெரியவரும். இதை நான் யாருக்கும் நேரடியாக சொல்லவில்லை.

திமுக

ஆனால் கட்சியைத் தாண்டி ஊழல் குறித்து பேசப் போகிறோம்.  யார் செய்தாலும் ஊழல் ஊழல் தான். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடந்துள்ளது. அவை அனைத்தும் வெளியிடப்படும்.”  என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.