தஞ்சாவூர், கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (68) மீன் வியாபாரி. பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குட்டி விவேக் (36) டிரைவர். இவர்கள் இருவரும் இன்று காலை சுமார் 11 மணியளவில் தஞ்சாவூர், கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரிலுள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர். கடை திறப்பதற்கு முன்பாகவே பாரில் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி, இருவரும் குடித்துள்ளனர்.

உயிரிழந்த குப்புசாமி – விவேக்

மது அருந்திய சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவேக்கை, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கு சிகிச்சை பலனின்றி விவேக்கும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் பலரும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு கூட ஆரம்பித்தனர். மேலும், டாஸ்மாக் கடையில் இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளரைத் தாக்க ஆரம்பித்ததோடு, டாஸ்மாக் வட்டாட்சியரான தங்க பிரபாகரனை டாஸ்மாக் பாருக்குள் தள்ளி சிறைபிடிக்க முயன்றனர். சம்பவத்தையடுத்து போலீஸார், தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். ஆய்வில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாருக்குள் மீன், வெள்ளரி மற்றும் தரமற்ற முறையில் தயாரிக்கபட்ட உணவுப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை

மேலும், இருவர் உயிரிழப்பிற்குக் காரணமான மது பாட்டில்களை ஆய்விற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். விசாரணையில், டாஸ்மாக் திறப்பதற்கு முன்பு பாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை இருவரும் வாங்கிக் குடித்தது உறுதியாகி இருக்கிறது.

விற்பனை செய்யப்பட்டது போலி மதுபானமா அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பாருக்கும், டாஸ்மாக் கடைக்கும் அதிகாரிகள் சீல்வைத்தனர்.

சீல் வைப்பு

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கி இருக்கும் நிலையில்,

டாஸ்மாக்

தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்ட மதுவைக் குடித்த 2 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.