எப்போ வெயிலடிக்கும்…. எப்போ மழையடிக்கும் என்றே யூகிக்க முடியாதபடி மாறியிருக்கிறது தமிழ்நாடு. வெயிலோ, மழையோ…. எதற்கும் பொருந்தக்கூடிய பானங்கள்தான் இந்த வார வீக் எண்டு ஸ்பெஷல். வெயில் அடித்தால் ஜில்லென்றும், மழை அடித்தால் அப்படியேவும் குடிக்கலாம்…

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக்

தேவையானவை:

வால்நட் – அரை கப் (முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)

வெனிலா பவுடர் – அரை சிட்டிகை

நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்

டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவு

கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக்

செய்முறை:

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச்சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து வடிகட்டவும். அழகான டம்ளர்களில் நிரப்பி குளூட்டன்ஃப்ரீ பிஸ்கட் உடன் பரிமாறவும்.

சோயா காபி

தேவையானவை:

சூடான சோயா மில்க் – 2 கப் (கடைகளில் கிடைக்கும் சோயா மில்க்கை வாங்கிச் சூடாக்கிக்கொள்ளவும்)

காபி டிகாக்‌ஷன் – 4 டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

சோயா காபி

செய்முறை:

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து சிறிய கப்களில் பரிமாறவும்.

பீச் வேகன் ஐஸ்க்ரீம்

தேவையானவை:

கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப்

பாதாம் விழுது – 2 டீஸ்பூன்

முந்திரி விழுது – 2 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

ஸ்லைஸ் செய்த பீச் பழங்கள் – ஒரு கப்

தேன் – 3 டீஸ்பூன்

பீச் வேகன் ஐஸ்க்ரீம்

செய்முறை:

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து அடித்து ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து இரண்டு நிமிடங்களுக்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடிக்கவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். இதேபோன்று இரண்டு, மூன்று முறை செய்யவும். பிறகு பழத் துண்டுகளுடன் ஐஸ்க்ரீம் கோப்பைகளில் பரிமாறவும்.

ஆல்மண்டு கோல்டு காபி

தேவையானவை:

குளிர்ந்த பாதாம் மில்க் – 2 கப் (முதல்நாள் இரவே அரை கப் பாதாமை ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டவும்)

காபி டிகாக்‌ஷன் – 4 டீஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

ஆல்மண்டு கோல்டு காபி

செய்முறை:

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் நுரைக்க அடித்து கப்களில் ஊற்றிப் பரிமாறவும். இதனுடன் வீட்டிலேயே செய்த சாக்கோ சிப்ஸ் குக்கீஸைப் பரிமாறலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.