2021-ம் ஆண்டு வரை 10 ஆண்டுக்காலம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க, முதன் முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாமல் 2021-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. கூட்டணிகளுடன் ஸ்டாலின் தலைமையில் களமிறங்கிய தி.மு.க, தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆளுங்கட்சியாகச் சட்டமன்றத்தில் நுழைந்தது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இரண்டாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க.

இத்தகைய சூழலில் தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சி குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `2 ஆண்டுக்கால தி.மு.க ஆட்சிக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண் என்ன?’ எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `0-2, 3-5, 6-8, 9-10′ என நன்கு விருப்பங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சிக்கு அதிகபட்சமாக 37 சதவிகிதம் பேர் `0-2′ மதிப்பெண்கள் வழங்கியிருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக 26 சதவிகிதம் பேர் `6-8′ மதிப்பெண்களும், 22 சதவிகிதம் பேர் `3-5′ மதிப்பெண்களும், 15 சதவிகிதம் பேர் `9-10′ மதிப்பெண்களும் வழங்கியிருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

தற்போது விகடன் வலைதளப் பக்கத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதித்துறை இலாகாவிலிருந்து மாற்றியிருக்கும் தி.மு.க அரசின் முடிவு குறித்து கருத்துக்கணிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும், https://www.vikatan.com/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.