நமது அன்றாடப் பயன்பாட்டில், கூகுள் மேப் தவிர்க்க முடியாததாகி விட்டது. எந்த இடத்துக்குச் செல்வதானாலும் அதன் தொலைவு எவ்வளவு, எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்று காண்பிப்பதோடு, ‘அடுத்து வரும் வலப்புறச் சாலையில் திரும்புங்கள், அல்லது இடது பக்கச் சாலையில் திரும்புங்கள்’ என நமக்கு டிஜிட்டல் வழிகாட்டியாய்த் திகழ்கிறது.

கூகுள் மேப்பில் நாம் தேடும் இடங்கள் அனைத்தும், லொக்கேஷன் ஹிஸ்டரியில் பதிவாகியிருக்கும். அதனை எப்படி அழிப்பது? இந்த கேள்விக்கு பதில் கூறுகிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் ஆர்.சர்வேஷ்…

ஆர்.சர்வேஷ்

இன்றைய இணைய உலகத்தில் நம் ஒவ்வொருவருடைய டேட்டாக்களும் மதிப்பு மிக்கவை. அதனைக் கொண்டுதான் பல்வேறு தொழில்கள் இயங்குகின்றன.

Google நிறுவனம் தன் பயனாளர்களின் பயண விவரங்களை சேகரிப்பதன் மூலம், அந்தந்த இடங்கள் தொடர்பான வணிகரீதியான விளம்பரங்களைக் காண்பிக்கவும் அந்த இடம் சார்ந்த இன்ன பிற தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்நிலையில் நமது ப்ரைவசிக்காக, கூகுள் மேப்ஸ் சேமித்து வைத்திருக்கும் பயண விவரங்களை எவ்வாறு அழிக்கலாம் என்பதை ஒவ்வொரு படிநிலையாகப் பார்க்கலாம்.

* உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில், கூகுள் மேப் அப்ளிக்கேஷனை ஓபன் செய்து கொள்ளவும்.

* வலப்புறத்தில் மேலே இருக்கும் உங்கள் கூகுள் கணக்கின் ப்ரொஃபைல் பிக்சரைத் தொடவும்.

* அடுத்ததாக `Your Timeline’ எனும் மெனுவைத் தேர்வு செய்து, அதனுள் நுழைந்ததும், மேலே வலப்புறமாக இருக்கும் மூன்று புள்ளிகளை (மெனு) அழுத்தவும்.

* அதனுள் இருக்கும் தேர்வுகளில், Settings and Privacy என்கிற தேர்வினை அழுத்தினால், Delete all Location history, என்கிற மெனு காண்பிக்கும். அதைச் சொடுக்கினால் நீங்கள் எங்கெங்கு பயணித்தீர்கள் என்கிற விவரங்களை அழித்து விடலாம்.

google maps

* அதே பக்கத்தில், Delete all location history என்பதற்கு கீழே, Automatically delete location history என்பதைத் தேர்வு செய்தால், எத்தனை மாதங்களுக்கு முன்புள்ள பயண விவரங்களை அழிக்க வேண்டும் என செட் செய்கிறோமோ அதன்படி தானாகவே அழிந்து விடும்.

* குறிப்பிட்ட இடத்தினுடைய டேட்டாவினையும் இதன் மூலமாகவே அழித்துக் கொள்ளலாம்.

* ஐபோன் பயனாளர்கள் இதே முறையில் கூகுள் மேப்ஸ் சென்று செட்டிங்ஸில் உள்ள மேப் ஹிஸ்டரியை தேர்வு செய்து அதில் மேல் உள்ள ‘search’ option உதவியுடன் தேதி வாரியாகவும் உங்கள் பயண விவரங்களை அழிக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.