இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக நேரம் செலவிடுவதாக அமேசான் வெப் சர்வீசஸ் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 

இந்தப் புதிய ஆராய்ச்சியில் பலவித புவியியல் பகுதிகளைச் சேர்ந்த 2,240-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 56 சதவிகிதத்தினர் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வந்தவர்கள். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 60 சதவிகித விளையாட்டாளர்கள் ஆண்கள் மற்றும் 40 சதவிகிதத்தினர் பெண்கள்.

அமேசான் வெப் சர்வீசஸ் உடன் இணைந்து லுமிகாய் என்ற கேமிங் மற்றும் ஃபண்ட் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஆய்வின் முடிவுகளை இந்தியா கேமிங் அறிக்கை 2022 -ல் வெளியிட்டது. அந்த அறிக்கையில்…

* இந்தியாவில் மின்னணு விளையாட்டுகளை விளையாடுபவர்கள் வாரத்திற்குச் சராசரியாக 8.5 முதல் 11 மணிநேரத்தை கேம் விளையாடுவதில் செலவழிக்கின்றனர்.

* ஒரு வாரத்தில் பெண்கள் 11.2 மணிநேரமும், ஆண்கள் 10.2 மணிநேரமும் தங்கள் நேரங்களை கேம் விளையாடுவதில் செலவழிக்கின்றனர். 

* 98 சதவிகிதத்தினர் ஸ்மார்ட்போன்களில் கேம்ஸ் விளையாடுகிறார்கள்; 23 சதவிகிதத்தினர் பர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களில் விளையாடுகிறார்கள் மற்றும் 14 சதவிகிதத்தினர் கேமிங் கன்சோல்களில் விளையாடுகிறார்கள்.

* 50 சதவிகிதத்திற்கு அதிகமானவர்கள் ரிலாக்ஸ் செய்யவும், பணம் சம்பாதிப்பதற்காக 13 சதவிகிதத்தினரும், நேரத்தைச் செலவழிக்க 12 சதவிகிதத்தினரும், சமூகமயமாக்கலுக்காக 11 சதவிகிதத்தினரும் கேம் விளையாடுகின்றனர்.

* கேம்ஸ் விளையாடாத 48 சதவிகிதத்தினர் லூடோ கிங், கேண்டி க்ரஷ் போன்ற கேஷுவல் கேம்ஸை எதிர்காலத்தில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

*கடந்த 12 மாதங்களில் கேமிங்கில் நேரத்தைச் செலவழிப்பது அதிகரித்துள்ளதாக 35 சதவிகித விளையாட்டாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

Smartphone (Representational Image)

* இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் கேம்ஸ் விளையாடும் சமூகத்தினர், இந்திய தீம் வீடியோ கேம்ஸை (Indian-themed video games) விளையாடுகின்றனர்.  

* 82 சதவிகித விளையாட்டாளர்கள் இந்தியப் புராணங்களின் அடிப்படையிலான கேம்ஸை விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர்.

*கேம்ஸை விளையாடாத 43 சதவிகிதத்தினரும் ராமாயணம் போன்ற இந்தியக் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கேம்ஸை விளையாட விரும்புகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.