அதிமுகவினர் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, மேளம் தாளம் முழங்க திறந்த வாகனத்தில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

image

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசினார். அப்போது… அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடையச் செய்வேன் என்று வி.கே.சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்.

சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம். அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்ற நிலையை அம்மாவும், புரட்சித் தலைவரும் உருவாக்கினார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

image

கழகத்தின் சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும் ஏற்கனவே உள்ள பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கவும் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர்களை வைத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.

image

அப்படி செய்தால் உறுதியாக, கீழ்மட்ட தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும் அப்படிப்பட்ட சூழ்நிலைதான் புரட்சித் தலைவர் காலத்திலிருந்து மாண்புமிகு அம்மா காலம் வரை கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம் ஏன்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.