“தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி” – ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் நீதிமன்றம் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால், ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி பதவியை இழந்தார். இந்த நிலையில், ராகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் பயோவை மாற்றியிருக்கிறார். அதில், “This is the official account of Rahul Gandhi | Member of the Indian National Congress | Dis’Qualified MP” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“பாஜக ராகுல் காந்தியைப் பேசவிடுவதில்லை, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!” – மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, டெல்லியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துகிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பா.ஜ.க ராகுல் காந்தியைப் பேசவிடுவதில்லை. ராகுல் காந்தி நாட்டுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார். இதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. இன்று காந்தி சிலைக்கு முன்பாக சத்தியாகிரகம் நடத்தப் போகிறோம்” என்றார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் காங்கிரஸ்!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை, நாடு தழுவிய அளவில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே

அனைத்து மாநிலங்களிலும் காந்தி சிலைக்கு முன்பாகவும், கட்சி அலுவலகங்களிலும் அந்தந்த மாநில நிர்வாகிகள் தலைமையில் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைமை அலுவலகத்திலும், பிரியங்கா காந்தி ராஜ் கட் பகுதியிலும் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.