நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது இலங்கை அணி. இந்த மோசமான தோல்விக்கு பிறகு கென்யா படைத்த மிக மோசமான சாதனையோடு கைக்கோர்த்துள்ளது இலங்கை அணி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.

image

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருண ரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

image

சீட்டுக்கட்டு போல் சரிந்த இலங்கை விக்கெட்டுகள்!

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. 3ஆவது ஓவரிலேயே இலங்கை அணியின் ஓபனிங்க் பேட்டரான நுவானிது பெர்னாண்டோ ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே இலங்கை அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். மற்றொரு ஓபனிங்க் பேட்ஸ்மேனான பதும் நிசாங்காவை 9 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றிய ஷிப்லே, இன் ஃபார்ம் பேட்டரான குசால் மெண்டிஸ்ஸை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

image

அடுத்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது லெக் ஃப்ரண்ட் விக்கெட்டில் டிக்னர் வெளியேற, மீண்டும் பந்துவீச வந்த ஹென்ரி ஷிப்லே அசலங்காவை 9 ரன்களில் வெளியேற்றி, கேப்டன் தசுன் ஷன்காவை டக் அவுட்டாக்கி வெளியேற்றி அடிமேல் அடி கொடுத்தார்.

image

முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஹென்ரி ஷிப்லே!

இலங்கை அணி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களத்தில் நின்று போராடிய கருணரத்னேவை வெளியேற்றிய ஷிப்லே தன்னுடைய முதல் 5 விக்கெட்டுகள் கொண்ட போட்டியை பதிவு செய்து அசத்தினார். 49 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், நியூசிலாந்தின் அடுத்தடுத்து பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

image

தொடர்ச்சியாக 2 முறை 100 ரன்களுக்குள் அவுட்டாகிய இலங்கை!

இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் 76 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி. இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

image

மிக மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி!

இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை 100 ரன்களை கூட எட்ட முடியாமல் மோசமான சாதானையை படைத்துள்ளது இலங்கை. இந்த மோசமான சாதானையை இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு கென்யா அணி தான் இரண்டு முறை சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 100 ரன்களை கூட அடிக்க முடியாமல் படைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 89, 93 ரன்களில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆல் அவுட்டாகியிருந்தது கென்யா. இந்நிலையில் தற்போது கென்யாவிற்கு பிறகு அந்த மோசமான சாதனையை படைத்து இணைந்துள்ளது இலங்கை அணி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.