30 வயதான அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார்க்கமுடியாமை, மங்கலான பார்வை, மின்னும் விளக்குகள், வளைந்து நெளிந்த வண்ணங்கள் போன்றவற்றை பார்க்கமுடியாமை போன்ற பிரச்னைகள் ஒற்றை தலைவலியால் ஏற்படும். ஒற்றை தலைவலியால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் பிரபலம் ஜெஹானே தாமஸ்(30) குறித்த இந்த செய்தியானது நியூ யார்க் போஸ்ட் இதழில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெஹானேவின் நண்பர் அலெக்ஸ் ரீஸ்ட் என்பவர் GoFundMe பக்கத்தில் ஜெஹானேவின் மரணம் குறித்து பகிர்ந்துள்ளார். டிக்டாக்கில் கிட்டத்தட்ட 72,000 ஃபாலோவர்களை கொண்ட ஜெஹானேவுக்கு ஆப்டிக் நியூரிட்டிஸ் (பார்வை நரம்பு அழற்சி) ஏற்பட்டிருக்கிறது. கண்ணின் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுவதால் உருவாகும் பிரசனை இது.

“கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அழுத்தம் காரணமாக எனக்கு ஒற்றை தலைவலி பிரச்னை இருந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் ஆப்டிக் நியூரிட்டிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டேன். பிறகு எனக்கு Multiple sclerosis இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் தற்போது என் தலையிலுள்ள அழுத்தமானது என்னை முற்றிலும் முடக்கிவிட்டது. முதலில் எனது அம்மா மற்றும் அப்பாவிற்கு நன்றி கூறுவதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவர்கள் எப்போதும் எனது மகன்களை கவனித்துக்கொள்வதில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்” என்று மார்ச் 5ஆம் தேதி ஜெஹானே ப்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram

A post shared by Jehane Thomas (@jehane_x)


ஜெஹானேவின் இறப்புக்கு பிறகு அவரைக்குறித்து பதிவிட்டுள்ள அவருடைய நண்பர் அலெக்ஸ் ஜெஹானேவிற்கு ஐசாக் மற்றும் எலைஜா என இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அவருடைய மரணம் முற்றிலும் எதிர்பாராத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெஹானேவின் சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருடைய அறுவைசிகிச்சை பற்றி பேசியதாகவும், அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் அவர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.

”என்னால் என் தலையைக்கூட உயர்த்த முடியவில்லை. என்னால் நடக்க முடியவில்லை. அனைத்து இடங்களுக்கும் சக்கர நாற்காலியிலேயே செல்லவேண்டியுள்ளது. அந்த அளவுக்கு வலி இருக்கிறது” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அறுவைசிகிச்சைக்கு பிறகு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் ஒற்றை தலைவலி அதிகரிக்கவே மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் ஜெஹானே. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் அவருடைய நண்பர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.