மாறிவரும் இந்த நவீன யுகத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி அதனுள்ளேயே மூழ்கியுள்ளனர். அந்த அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்க, அவரவரின் குடும்பத்தினர் மேற்கொள்ளாத டெக்னிக்ஸே இருக்காது எனலாம். ஆனாலும் ‘விதவிதமா முயன்றாலும் இவங்களை அதிலருந்து வெளியே கொண்டு வரமுடியலப்பா’ என ஒருகட்டத்தில் கைவிட்டுவிடுவர். சிலர் சாமர்த்தியமாக முயற்சியில் வெற்றியும் பெற்றிருப்பர்.

ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒரு தந்தை, தன் முயற்சியில் சிறிதும் கருணையின்று நடந்துகொண்டிருக்கிறார். கேம் விளையாடும் தனது மகனை திருத்த அவர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை, பகீர் கிளப்பியிருக்கிறது என்றே சொல்லலாம். இவரின் மகன், வீட்டில் அனைவரும் தூங்கச் சென்ற பிறகு நள்ளிரவு நேரத்தில் மொபைலில் வீடியோ கேம் விளையாடியுள்ளான். அதனைக்கண்ட தந்தை, கடுமையான தண்டனையை மகனுக்கு கொடுத்திருக்கிறார்.

image

அதன்படி தனது 11 வயது மகனை கிட்டத்தட்ட 17 மணிநேரம் தூங்க விடாமல் தொடர்ச்சியாக கேம் விளையாட வைத்திருக்கிறார் அந்த தந்தை. சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த ஹூவாங் என்பவர்தான் இதனை செய்திருக்கிறார். ராத்திரி நேரத்தில் தூங்காமல் 11 வயது மகன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட ஹூவாங், சிறுவனை தண்டிக்கும் விதமாக அடுத்த 17 மணி நேரத்துக்கு கேம் விளையாட செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட காலை 6.30 மணிவரையில் எந்த சோர்வும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்த ஹூவாங்கின் மகன், இடையே பல முறை சோர்வாக உணர்ந்திருக்கிறார். ஆனாலும் தந்தையின் கிடுக்குப்பிடியால் தொடர்ந்து விளையாடியுள்ளார். காலை 6.30 மணியளவில் மிகவும் சோர்வடைந்துள்ளான் சிறுவன். ஆனாலும் அடுத்த ஆறு மணிநேரத்துக்கு விளையாட நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறான். சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு பின்னர் களைத்துப்போன அந்த சிறுவன் தூக்க கலக்கத்தில் மயங்கியே விழச் சென்றிருக்கிறான். ஆனால் விடாப்பிடியாக இழுத்து பிடித்து ‘இன்னும் 5 மணிநேரம் இருக்கிறது’ எனச் சொல்லி மகனை மேலும் கேம் விளையாடச் செய்திருக்கிறார் ஹூவாங்.

இப்படியாக 17 மணிநேரம் தொடர்ந்து தூங்காமல் மகனை கேம் விளையாடச் சொல்லி தண்டித்திருக்கிறார் அந்த தந்தை. ஒரு வழியாக கொடுத்த கெடுவை முடித்த சிறுவன் தந்தையிடம் மண்டியிட்டு கதறி அழுதிருக்கிறான். இதுபோக, “சத்தியமாக இரவு 11 மணிக்கு முன்பே தூங்கச் சென்றுவிடுகிறேன். தூங்குவதற்கு முன் ஃபோனில் கேம் விளையாட மாட்டேன்” என்று கைப்பட எழுதியும் கொடுத்திருக்கிறான் அந்த 11 வயது சிறுவன்.

இந்த மொத்த நிகழ்வையும் சீனாவின் Douyin சமூக வலைதளத்தில் பதிவேற்றிய தந்தை ஹூவாங், உங்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க இதுபோன்ற தண்டனையை யாரும் முயற்சிக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆம், யாரும் தயவுசெய்து முயலவேண்டாம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.