16-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோத உள்ளது.

CSK அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான CSK அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர். சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் என தோனியும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், “இந்த வருட ஐபிஎல் உடன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை” என்று ஆஸ்திரேலியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

தோனி

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷேன் வாட்சன், “இது தோனியின் கடைசி ஐபிஎல் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு ஐபிஎல் தொடர்களில் நிச்சயம் விளையாடுவார்.

அவர் இன்றும் ஃபிட்டாகத்தான் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. தோனியின் தலைமைப் பண்பும் சிறப்பான ஒன்றுதான். ஆட்டத்தின் போக்கை நன்கு கணித்து அதற்குத் தகுந்தாற்போல முடிவுகளை எடுக்கக்கூடியவர். அவரது தலைமையில் சென்னை அணி விளையாடுவது அந்த அணிக்குக் கூடுதல் பலம். சென்னை அணி தொடர் வெற்றிகளைக் குவித்ததற்கான காரணங்களில் தோனியின் பங்கும் மிக முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.