அரசுப் பணிகளில் சேர்வதற்குப் பலரும் விடாமுயற்சியோடு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதற்காக அரசின் தேர்வு அட்டவணையைத் தொடர்ந்து கவனித்து வருவது நல்லது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான தற்காலிக அரசு வேலைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முகப்பு பக்கம்!

இந்த அட்டவணையில், வேளாண் அதிகாரி மற்றும் உதவி இயக்குநர், சாலை ஆய்வாளர், சுற்றுலாத் துறை அதிகாரி, ஒருங்கிணைந்த நூலக சேவைப் பணி, ஆண் மற்றும் பெண் உதவி ஜெயிலர், போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் என 29 பணிகளின் தேர்வுகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

என்னென்ன தேர்வுகள், என்னென்ன மாற்றங்கள் என்பதைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்காக நீங்கள் செய்யவேண்டிய வழிமுறைகள்:

*முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ பக்கமான www.tnpsc.gov.in -க்கு செல்ல வேண்டும்.

Annual Planner

*அதன் முகப்புப் பக்கத்தில் மேலே உள்ள சர்ச் பட்டனில், `Updated Tentative Annual Recruitment Planner- 2023’ என டைப் செய்து தேட வேண்டும்.

*அதில் வருடாந்திர திட்டங்களுக்கான (Annual Planner) லிங்க் இருக்கும். 

*அதை கிளிக் செய்தால், வருடாந்திர திட்டங்களுக்கான தனிப்பக்கம்  தெரியும். 2023-ம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர திட்டத்தை  (Annual Planner 2023 – Updated) கிளிக் செய்கையில், பி.டி.எஃப் ஓபன் ஆகும்.

*புதுப்பிக்கப்பட்ட தேர்வுகளின் தேதிகள் மற்றும் விவரங்கள் அதில் வரும். அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசுப் பணிகளுக்காக முயன்று வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.