யூ ட்யூப் வீடியோவை லைக் செய்தால் பணம் தருவதாகக் கூறி ஆன்லைனில் பணம் பறிக்கும் புதிய மோசடி அதிக அளவில் நடந்துவருவதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா தெரிவிக்கிறார். ’சுருங்கக்கேள், விளங்கிக்கொள்’ பகுதியில் அவருடனான கலந்துரையாடலை பார்க்கலாம்.

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில் எந்த வித புகார்கள் அதிகம் வருகின்றன?

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருவதால் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த ஒருவகை குற்றம் மட்டும்தான் நடக்கிறது என்று சொல்லமுடியாது. இன்றைய தேதியில் மட்டும் பார்த்தால் இந்திய அளவில் 30 முதல் 35 வகையான சைபர் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது குறிப்பாக யூட்யூப் வீடியோவை லைக் செய்தால் பணம் தருவதாகக்கூறி ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. ஒரு வீடியோவை லைக் செய்தால் பணம் தருவதாகக் கூறுவார்கள். நிறைய வீடியோக்களை லைக் செய்தால் நிறைய பணம் வருமே என்று எண்ணி மக்களும் லைக் செய்கிறார்கள்.

குற்றவாளிகள் பெரும்பாலும் டெலிகிராம், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். இதனால் மக்களும் அவர்கள் சொல்கிறபடி செய்வார்கள். அப்படி 3000 முதல் 4000 வரை பொதுமக்களுக்கு பணம் வரவேண்டி இருக்கும். பணம் வரும் நேரத்தில் குற்றவாளிகள், புதிய ஸ்கீம் அறிமுகப்படுத்துவதாகக் கூறி பணம் கட்டச் சொல்வார்கள். குறிப்பாக ஒரு வெப்சைட் அட்ரஸ் கொடுத்து அதில் பணம் கட்டச் சொல்வார்கள்.

image

உதாரணத்திற்கு ஒரு லட்சம் பணம் தரவேண்டுமெனில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என இணையத்தில் காட்டும். அதனைப் பார்க்கும் பொதுமக்களும் மேலும் மேலும் பணத்தைக் கட்டுவார்கள். அப்படி பணம் கட்டிவிட்டு பணத்தை எடுக்கலாம் என்று நினைத்தால் எடுக்கவே முடியாது. அதற்கு பல காரணங்கள் சொல்வார்கள். யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் தருவதாக கூறும் மோசடி குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் அதிக புகார்கள் வந்துள்ளன.

கூகுள்பேயில் குறிப்பிட்ட தொகையை அனுப்பி உடனடியாக திருப்பி அனுப்பச்சொல்கிறார்கள். அதனை திருப்பி அனுப்பும்போது அதிக பணம் எடுத்துக்கொள்கிறார்கள். மீண்டும் அவர்களை தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது தொடர்புகொள்ள முடிவதில்லை. இந்த குற்றம் குறித்து விளக்குங்கள்..

இதுபோன்ற செய்திகள் வாட்ஸ் அப் போன்ற அதிகம் உலாவருகிறது. ஆனால் சென்னையை பொருத்தவரை இதுவரை சைபர் கிரைமில் இதுகுறித்த வழக்குகள் பதிவாகவில்லை. ஆனால் இதுபோன்ற குற்றங்கள் எப்படி நடக்கிறதென்றால், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் மார்க்கெட் ப்ளேஸ் என்ற ஒன்று இருக்கிறது. அங்கு பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்யலாம். ஒருவர் ஒரு பொருளை விற்க முற்படும்போது, எதிர்முனையில் கிரிமினல் அந்த பொருளை தான் வாங்கிக்கொள்வதாக வந்து பேசுவார்கள். அப்படி பேச ஆரம்பிக்கும்போதே வாட்ஸ் அப்பில் வரச்சொல்வார்கள். உடனே ஒரு லிங்க் அனுப்பி, கூகுள்பே அல்லது போன்பே இருந்தால் அந்த யுபிஐ அல்லாத மற்றொரு யுபிஐ- ஐடியை கொடுத்து தான் ஒரு லிங்க் அனுப்புவதாகவும், அதனை டவுன்லோட் செய்து அதில் பணம் கட்டுகிறேன் என்றும் சொல்வார்கள்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/jXwVobenlxY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>

பொதுவாக எந்த செயலியாக இருந்தாலும் ப்ளே ஸ்டோரில் தான் டவுன்லோட் செய்வோம். ஆனால் இவர்கள் பணம் கட்டுகிறார்களே என்று நினைத்து அவர்கள் கொடுக்கும் லிங்கை க்ளிக் செய்து 1 ரூபாய் கட்டுவோம். எதிர்முனையில் இருப்பவர் பதிலுக்கு 2 ரூபாய் நமக்கு அனுப்புவார். இந்த நேரத்தில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு நமது அக்கவுண்ட்டில் இருக்கும் பணம் மொத்தமும் பறிபோகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

பேட்டி: ஆனந்தன், தொகுப்பு: சினேகதாரா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.