அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில், ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் கூடிய கிச்சன் ஒன்று இயங்கி வருகிறதாம். தமிழ்நாட்டில் இயங்கும் அம்மா உணவகம் போல, அங்குள்ளோருக்கு பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாக இந்த உணவகம் இருப்பதாக தமிழ் ஃபுட் ப்ளாகர் ஒருவர் தனது சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

image

Madrasi in NYC என்ற பெயரிலான அந்த ஃபுட் ப்ளாகர், தனது இன்ஸ்டாகிராமில் “நியூயார்க்கில் உண்மையான இந்திய உணவைத் தேடுவோருக்கு, அம்மா’ஸ் கிச்சன்தான் சிறந்த சாய்ஸ். இங்கு முன் பக்கத்தில் கல்யாண விருந்துக்கான டைனிங் போல ஒரு டைனிங் அமைக்கப்பட்டு, உணவகம் இருக்கிறது. வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறுகிறார்கள். பின்புறத்தில் Buffet-ம் இருக்கிறது. அங்கு நீங்கள் அசைவ உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்… அதுவும் வெறும் $18க்கு!

image

உணவுப் பிரியர்கள், இந்திய உணவு வகைகளின் ரசிகர்கள், புதிய உணவகத்தைத் தேடுபவர்களுக்கெல்லாம் இந்த இடம்தான் பெஸ்ட் சாய்ஸ். நல்ல வரவேற்பு, கண்ணியமான மற்றும் நட்பான ஊழியர்கள் இங்கு உள்ளனர்” என்று கூறியிருக்கிறார். இதே கடை அமெரிக்காவின் வேறு சில இடங்களிலும் இருக்கின்றவாம். இந்த உணவகத்தை தினேஷ் குமார் என்பவர் நடத்தி வருகிறார்.

image

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இந்நிறுவனத்தை இவர் பல இடங்களில் நிறுவியிருக்கிறார். ஜெயலலிதா மறைவின்போது, “நாங்கள் அவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் கூட, அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என இவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த பயனர் பகிர்ந்துள்ள வீடியோவின்படி, உணவகத்தின் உள்ளே ஜெயலலிதாவின் படங்கள் ஆங்காங்கே உள்ளன. இதைக்கண்ட நெட்டிசன்கள், உணவகத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் நம்ம ஊர் அம்மா உணவகத்தை ஒப்பிடுகையில் இந்த அம்மா’ஸ் கிச்சன் காஸ்ட்லி என்றும் சொல்லி வருகின்றனர். இதற்கு இங்கு தமிழ்நாட்டில் நிர்வகிக்கப்படும் அம்மா உணவகம் முழுக்க முழுக்க சாமானிய மக்கள் மலிவு விலையில் தங்களது பசியை ஆற்றிக்கொள்வதற்காக இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தகுந்த காரணமாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.