வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் கண்டிப்பாக சோர்வடைய மாட்டார்கள் அதே நேரத்தில் அவர்களுக்கு சத்தான உணவு வகைகளும் தேவை. இதோ சில சத்தான உணவுகள்.

*ஆரஞ்சு தோல் மற்றும் விதையை எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக்கி அதனுடன் குளுக்கோஸ், சிறிது சர்க்கரை, எலுமிச்சை ஜூஸ் சேர்ந்து சாப்பிட கொடுக்கலாம். தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு கால்சியம் சத்து இதன் மூலம் கிடைக்கும். உங்கள் குழந்தைக்கு எளிதில் சளி பிடிக்கும் எனில் இந்த ஜூஸ் தவிர்க்கலாம்.

Representational Image

*ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். வேகவைத்த ராஜ்மா ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது ஓமப்பொடி, எலுமிச்சை ஜூஸ் விட்டு சாப்பிட கொடுக்கலாம் இது இரவில் வெகு நேரம் படிக்கும் பிள்ளைகளுக்கு உதவும். நிறைய சுறுசுறுப்பை தரக்கூடியது.

*மாதுளம் பழத்தை தோல் உரித்து உதிர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து கொடுக்கவும் . ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் வரும் உடல் உஷ்ணம் இதன் மூலம் தணியும்.

*அகலமான பாத்திரத்தில் பிரஷ் கிரீம் உடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய ஆப்பிள், பைனாப்பிள் துண்டுகள், கொய்யா, திராட்சை ,அக்ரூட் பருப்பு சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் பிரிட்ஜில் வைத்திருந்து கொடுக்கவும். இது உடனடியாக சோர்வை நீக்கி மூளை சுறுசுறுப்பு பெற உதவும்.

Representational Image

*வெந்த துவரம் பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வெந்தயக்கீரை சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். கொதித்த பின் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நெய் விட்டு வெந்தயக் கீரை கூட்டைப் பிசைந்து சாப்பிட இரும்புச்சத்து கால்சியம் விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் சேரும்.

*கேரட்டை மிக்ஸியில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது நீர்சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து சூடாகவோ, குளிர வைத்தோ கொடுக்கலாம் .வைட்டமின் இ , கால்சியம் நிறைந்த மில்க் ஷேக் இது. மூளைக்கு செல்லும் ரத்தத்தை இது அதிகரிக்கும். இதற்கு கேரட்டில் உள்ள “கரோடின் உதவுகிறது. பாடத்தில் நன்கு கவனம் செலுத்தவும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இந்த கேரட் மில்க் ஷேக் துணை செய்யும்.

Representational Image

*ஒரு கப் கோதுமை மாவுடன் ,கால் கப் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய் இஞ்சி விழுது அரை டீஸ்பூன், சீரகத்தூள் கால் டீஸ்பூன், தேவையான உப்பு ,சேர்த்து பிசறி வெதுவெதுப்பான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் சுட்டெடுக்கவும். (நெய் விட்டு சுடவும்) வித்தியாசமான சிலையில் இருக்கும் இந்த சப்பாத்தி பிள்ளைகளுக்கு நிரம்ப பிடிக்கும்.

*வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், நான்கு காய்ந்த மிளகாய் அரை டேபிள்ஸ்பூன் உளுந்து பெருங்காயம் கால் டீஸ்பூன் சேர்த்து வறுத்து எடுக்கவும் இதனுடன் எலுமிச்சை அளவு புளி, தேவையான உப்பு , கால் கப் உதிர்த்த கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சிறிது நீர் விட்டு பச்சை வாசம் போக குழம்பாக கொதிக்க விட்டு கடுகு தாளிக்கவும். இதை இட்லி தோசைக்கு தொட்டுகொள்ள கொடுக்கலாம். இந்த கறிவேப்பிலை குழம்பு மூளை திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

Representational Image

*ஒரு கப் ஸ்வீட் கார்னை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்‌இரண்டு டீஸ்பூன் சோள மாவுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வானலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (தலா 50 கிராம்)வெங்காயம்’ பூண்டு 6 பல் சேர்த்து நன்கு வதக்கவும் காய்கறிகள் நன்கு வதங்கியதும் இவைகள் மூழ்குமாறு நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதிக்கும் போது சிறிதளவு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும் காய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கிளறி இறக்கி வேகவைத்த ஸ்வீட் கார்னை மேலே தூவி பிள்ளைகளுக்கு கொடுக்கவும். இந்த வெஜ் அண்ட் ஸ்வீட் கார்ன் சூப் மனதில் ஏற்படும் பதற்றத்தை போக்கி சுறுசுறுப்பு பெற உதவும்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரைவேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.