பிளாஸ்டிக் பைகளுக்கு BYE BYE சொல்லுங்கள் எனவும், இந்தியாவை தூய்மை படுத்த ஒவ்வொரு மக்களும் உறுதிமொழி எடுங்கள் எனவும், 98ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 98-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

image

உரையாடலில் மக்களிடையே பேசிய மோடி, “தூய்மை இந்தியா திட்டம், இந்தியாவின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவை தூய்மைப்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மக்களும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மக்களும் இனிமேல் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் `இனிமேல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம், துணி பைகளை மட்டுமே பயன்படுத்துவோம்’ என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.

“இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு மக்களும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்பதை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தூய்மை ஒவ்வொரு இந்தியர்களின் தூய்மை என்று கூறினார்.

image

மேலும் பேசுகையில், “இந்த மாதம், மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பீரியாவில் ‘திரிபெனி கும்ப மகோத்சவ்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த பாரம்பரியமான கும்ப திருவிழா ஆயிரம் ஆண்டு கால பழமையானது என்றாலும், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விழா நிறுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு, இந்த விழா மீண்டும் புத்துயிர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதால், இந்த ஆண்டு இவ்விழா மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

image

மேலும் அவர், “ஒரு காலத்தில் இந்தப்பகுதி சமஸ்கிருதம், கல்வி மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மையமாக இருந்ததாக, பல்வேறு வரலாற்று ஆய்வுகள் கூறும் நிலையில், அதனை மீட்டெடுக்கக்கூடிய கடமை நமக்கு உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.