சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க உள்ளடக்கிய இந்தியாவுக்கு ஆதரவாக, நமது கருத்தியல் நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பல சமயங்களில் நீதியை புறந்தள்ளிவிடாமல் இருப்பது மிகவும் அவசியம்.

பில்கிஸ் பானோவின் வழக்கு, கிறிஸ்தவ தேவாலயங்கள்மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, முஸ்லிம் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து அகற்றுவது போன்ற பிரச்னைகள் குறித்து, நாம் இன்னும் பலமாக குரல் கொடுத்திருக்கலாம். நாட்டின் மதச்சார்பின்மை என்ற அஸ்திவாரத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பா.ஜ.க – காங்கிரஸ்

ராகுல் காந்தி தலைமையிலான ‘பாரத் ஜோடோ யாத்ரா’ கட்சியின் சமீபத்தில் முடிவடைந்த பிரசாரத்தின் வெற்றி. அதற்கு பாராட்டுகள். சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பா.ஜ.க-வின் இடிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பதற்றங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.