அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித வீட்டு வேலை­களை ரோபோக்களே செய்­யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை.

ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்­காடு வீட்டு வேலை­களை ரோபோக்களே செய்­யும் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

image

PLOS ONE எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2033ஆம் ஆண்­டுக்­குள் வழக்­க­மான வீட்­டு­ வே­லை­கள் எந்த அள­வுக்கு இயந்­தி­ர­ம­ய­மா­கும் என்று தெரிவிக்கும்படி செயற்கை நுண்­ண­றிவு நிபு­ணர்­கள் 65 பேரி­டம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில், “2033ஆம் ஆண்­டுக்­குள் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும். அதனால் வீட்டு வேலைக்காக மனிதர்கள் செலவிடும் நேரம் சுமார் 60 சதவீதமாக குறை­யும்” என்­று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்கள் ‘வேலை அல்லது படிப்­பிற்­கான’ தங்­களது நேரத்­தில் 43 சதவீத நேரத்தை வீட்­டு­ வேலை செய்­வ­தற்­காக ஒதுக்­கு­கின்­ற­னர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோக்களின் வருகையால், அது சீராகலாம்.

இதேபோல பிள்­ளை­க­ளுக்­கு பாடம் கற்றுக் கொடுப்பது, அவர்­க­ளு­டன் நேரம் செலவிடுவது, வய­தான குடும்ப உறுப்­பி­னரை கவ­னித்­துக்­ கொள்­வது ஆகி­ய­வற்­றில் 28 சதவீத வேலை­கள் மட்­டுமே ரோபோக்கள் செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ரோபோக்களால் மனி­தர்­க­ளின் வேலை பறிபோகுமா என்று ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்டபோது, வீட்­டு­ வே­லை­கள் செய்யும் ரோபோ, உதா­ர­ணத்­துக்கு தரை­யைச் சுத்­தம் செய்­யும் ரோபோக்கள் உல­கி­லேயே மிக அதி­க­மான எண்ணிக்கையில் உற்­பத்தி செய்யப்பட்டு விற்­கப்படு­வ­தாக ஆய்­வில் கலந்­து கொண்ட நிபுணர்கள் பல­ரும் சுட்­டிக்­காட்­டி­னர்.

image

இன்றைய சூழலில், வீட்­டு ­வேலைக­ளைப் பெரும்­பா­லும் வீட்டுப்பெண்­களே செய்­கின்­ற­னர். பல இடங்களில், இல்லத்தரசிகள் என்ற பெயரில், அவர்கள் வருமானமும் பறிபோகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்­க­ளின் வரு­வாய், சேமிப்பு, ஓய்வூதியம் போன்­றவை பாதிக்­கப்­படும் என்று முந்­தைய பல ஆய்வுகள் கூறி­யுள்­ளன. அப்படியிருக்க, வீட்­டு­ வே­லை­கள் இயந்­தி­ர­ம­ய­மா­னால் பெண்­க­ளுக்­குக் கூடு­தல் நேரம் கிடைக்­கும் என்­றும் பாலின சமத்­து­வம் பெரு­கும் என்­றும் அண்­மைய ஆய்வை மேற்­கொண்ட பிரிட்­டிஷ், ஜப்­பா­னிய ஆய்­வா­ளர்­கள் நம்­பு­கின்­ற­னர். எனி­னும், ரோபோவை வாங்க அதி­கச் செல­வா­கும் என்­ப­தால் பணம் படைத்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே ஓய்­வு­நே­ரம் கிடைக்­கும் சூழல் உரு­வா­க­லாம் என்று ஆய்வாளர்கள் எச்­ச­ரிக்கின்றன­னர்.

வீட்டுவேலை செய்வதுடன், வீட்­டில் உள்­ள­வர்­கள் என்ன செய்­கி­றார்­கள் என்­ப­தையும் கண்­கா­ணித்­துக் கூறும் ஆற்­றல் ரோபோக்களுக்கு உள்­ளது. இருப்பினும் அத்­த­கைய ஆற்­றல் பெற்ற ரோபோ வீட்டிலிருந்து நோட்­ட­மி­டு­வதை அனு­ம­திக்க மனி­தச் சமூ­கம் இன்­னும் தயா­ரா­க­வில்லை என்­றும் ஆய்­வா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.