நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு வடிகாலாக இருந்து வருவது மாடித்தோட்டம். இந்த மாடித்தோட்டத்தை அமைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதை எப்படி அமைப்பது? பராமரிப்பது, செடிகளை, விதைகளை எங்கு வாங்குவது என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மாடித்தோட்டத்தில் ஏ டூ இசட் தகவல்களை தெரிந்துகொள்வதற்காக பசுமை விகடன், இந்திரா கார்டன்ஸ் இணைந்து வழங்கும் வீட்டிலும் செய்யலாம் விவசாயம் என்ற தலைப்பில் ஜனவரி 28-ம் தேதி சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் மாடித்தோட்ட நேரடி பயிற்சி நடைபெற உள்ளது.

மாடித்தோட்டம்

இந்தப் பயிற்சியில் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் குறித்து தோட்டக்கலை வல்லுநர் அனூப்குமார் பயிற்சி அளிக்க உள்ளார். இவர் சென்னையில் அமைந்துள்ள பல மாடித்தோட்டங்களை நிறுவுவதற்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார். இன்றும் மாடித்தோட்டம் அமைத்துள்ளோருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

மாடித்தோட்டத்தில் செலவில்லாமல் செடிகள் அமைப்பது குறித்தும், கிடைக்கும் பொருள்களில் செடிகளை நடுவதும் குறித்தும், நாட்டு ரகங்களைப் பயன்படுத்தி தோட்டம் அமைப்பதும் குறித்தும் பயிற்சியளிக்க உள்ளார் திருப்பூரைச் சேர்ந்த பிரியா ராஜ்நாராயணன். இதோடு மரபு விதைகளைச் சேகரிப்பதற்கும் வழிகாட்ட இருக்கிறார்.

பயிற்சி அறிவிப்பு

இந்த நிகழ்ச்சியில் பேசவிருக்கும் பிரியா ராஜ்நாராயணனின் சிறிய முன்னுரை…

“நம்மை சுற்றியிருப்பதை வைத்து எளிமையாக வீட்டில் எப்படி தோட்டம் அமைப்பது? என்பதை பற்றி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் மொட்டை மாடியில் ஐந்து அடுக்கு சாகுபடி செய்வது குறித்தும், பலவிதமான பாத்தி வகைகள், வீட்டில் இருப்பதை வைத்து பூச்சி விரட்டி மற்றும் வளர்ச்சி ஊக்கி தயாரிப்பு ஆகியவற்றைக் குறித்து விரிவாக விளக்க உள்ளேன். எளிதாக கூறவேண்டுமானால் ‘விதை முதல் விதை வரை” தெரிந்துக்கொள்ள இந்த நிகழ்ச்சிக்கு வாருங்கள்!” என்று கூறினார்.

இதோடு சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள மாடித்தோட்ட விவசாயி மைத்ரேயன் அமைத்திருக்கும் மாடித்தோட்டத்தை நேரடியாகப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடியில் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றை வளர்த்து ஆரோக்கியமான, நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்க உள்ளார் மைத்ரேயன்.

மேலும் நேரடி மாடித்தோட்ட பயிற்சியில்…

  • தொட்டி, பைகளில் செடிகளை வளர்க்கும் நுட்பங்கள்,

  • நோய் கட்டுப்பாடு,

  • இயற்கை இடுபொருள் தயாரிக்கும் முறைகள்,

  • மாடித்தோட்டங்களை காணும் வாய்ப்பு.

– என பல தகவல்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.

நாள்: ஜனவரி 28, 2023 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: இந்திரா கார்டன்ஸ், கோவிலம்பாக்கம், சென்னை.

க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்யவும்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பயிற்சிக் கட்டணம் ரூ.500. கட்டணத்தை மேலே கொடுத்துள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து செலுத்த வேண்டும். பிறகு, கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்களது முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஏதாவது சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் 99400 22128 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.