தமிழ்நாட்டில் எந்தளவுக்கு ஜல்லிக்கட்டு, மாடுபிடி விழா, எருது விடும் திருவிழா கொண்டாடப்படுகிறதோ, அதேபோல கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடாவில் ஜல்லிக்கட்டு இந்தாண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போலன்றி, இது சற்று வேறுவிதமாக கொண்டாடுகின்றனர். ‘காளைகளை மக்கள் கூட்டத்திற்குள் விட்டு அதன் பெரிய கொம்பைப் பிடித்து அடக்குவோம்’ என்கின்றனர் கேரளாவில் உள்ள ஜல்லிக்கட்டு இளைஞர்கள். காளைகளின் கொம்பை பிடித்துக்கு அடக்குவதற்கு இளைஞர்கள் ஊக்கமாக களத்தில் இறங்கி செயல்படுகின்றனர்.

ஜல்லிக்கட்டில்

மூணாறுக்கு அருகில் உள்ள கோவிலூர், கொட்டகாம்பூர், வட்டவாடா ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 3 கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் இத்திருவிழா, மலையாள நாள்காட்டியின் மகரம் 2 அன்று வருகிறது.

கேரளா ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விழா ஏறக்குறைய 4 மாதங்கள் (அதாவது தை‌ தொடங்கி, சித்திரை வரை) நடக்கின்ற நிலையில், ​​வட்டவாடா பஞ்சாயத்தில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஒன்று மகரம் 2-ம் நாள் அன்றும், மற்றொன்று கிராமத் தலைவர்கள் பரஸ்பரமாக தீர்மானிக்கும் தேதியிலும் நிகழும்.

“மகரம் 2 அன்று நிகழ்ச்சியில் பங்கேற்காத காளைகளை பங்கேற்க அனுமதிக்கும் விதமாக இன்னொரு நாளில் ஜல்லிக்கட்டு விழா கொண்டாடப்படுகிறது” என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

கேரளா ஜல்லிக்கட்டு

வட்டவடா பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் வீட்டுக்கு ஒரு காளை அல்லது இரண்டு காளைகளை வைத்திருப்பது ஒரு வழக்கமாக உள்ளது. முன்பெல்லாம், சபரிமலை கோயிலுக்குச் செல்வது மாட்டு வண்டிகளில்தான். இன்று அந்தப் பழக்கம் குறைந்துவிட்டாலும் மலைபகுதியில் நெல் சாகுபடியில் காளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு பயிரிடப்படும் நிலங்களில் உழவு ஓட்டுவதற்கு காளைகள்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் என்பது நெல் அறுவடையைக் குறிக்கிறது. இதனை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு கிராம மக்கள் காளைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்து ஜல்லிக்கட்டில் விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விழா ஏறக்குறைய 4 மாதங்கள் (அதாவது தை‌ தொடங்கி, சித்திரை வரை) நடக்கின்ற நிலையில், ​​வட்டவாடா பஞ்சாயத்தில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஒன்று மகரம் 2-ம் நாள் அன்றும், மற்றொன்று கிராமத் தலைவர்கள் பரஸ்பரமாக தீர்மானிக்கும் தேதியிலும் நிகழும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.