அதிகரிக்கும் கடன் சுமை… நெருக்கடியில் சிக்குமா தி.மு.க அரசு?

ஸ்டாலின்

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் பிறகு, பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், தமிழக அரசின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக விமர்சித்தது.

இந்தப் பிரச்னையைத் தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க., ‘கடுமையான இந்தச் சூழலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்று வாக்குறுதியும் அளித்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் தமிழக அரசு தொடர்ந்து கடன் வாங்கிவருகிறது.

ஏற்கெனவே அரசின் கடன் அதிகரித்துவரும் நிலையில், மேலும் ரூ.51 ஆயிரம் கோடி கடன் வாங்குவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்த விரிவான அலசல் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி, , பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளரான இராம.ஸ்ரீநிவாசன், தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டவர்களின் கருத்துகளுடன் கூடிய விரிவான கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

குடிநீரில் மலம்:  பா.இரஞ்சித் குற்றச்சாட்டு!  

பா.இரஞ்சித்

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ஒன்றரை ஆண்டுக்காலத்தில் செய்தவை என்ன?- பட்டியலிட்ட  ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

மிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில், அரசால் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன, அதில் எத்தனை செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன, அறிவிப்புகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பவற்றைச் சட்டமன்றத்தில் இன்று பட்டியலிட்டார்.

ஆளுநர் உரை மீதான நன்றி தீர்மானத்தின்போது பதிலுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசியதை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

புகாரில் சிக்கிய அன்னா ஹசாரே !

அன்னா ஹசாரே

த்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டுக் காலத்தில் ஊழலுக்கெதிராக டெல்லியில் கடுமையாகப் போராடியவர் மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் மூலமாகத்தான் டெல்லியின் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பவரே வெளியுலகுக்குத் தெரியவந்தார்.

இந்த நிலையில்தான், அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்த செய்தியை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

பேக்கிங் உணவுகள்: ‘Expiry’ க்கும் ‘Best before’ க்கும் என்ன வித்தியாசம்?

பேக்கிங் பொருட்கள்

பேக் செய்யப்பட்டு வரும் அனைத்து வகை உணவு மற்றும் குளிர்பானங்களில் FSSAI என்ற வார்த்தை இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பார்க்கவேண்டும். அதற்குக் கீழே லைசென்ஸ் எண்ணையும் கவனிப்பது நல்லது. பேக் செய்யப்பட்ட தண்ணீர் முதலியவற்றில் ISI முத்திரை இடப்பட்டிருக்கும்.

எண்ணெய், தானியங்கள், மசாலாப் பொருள்கள், தேன் ஆகியவற்றில் அக்மார்க் முத்திரை வைத்திருப்பார்கள். இந்த மூன்றில் ஏதாவது ஒரு முத்திரை பேக்கிங் உணவுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த முத்திரை எதுவுமே இல்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இது அடிப்படையான விஷயம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

கரும்பு

பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு பதறி,டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம்.

காரணம், அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள்.

கரும்பு தின்றதும் ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

“துணிவு : ஃபைனான்ஸின் அடிப்படைகூட தெரியாம படம் எடுக்கலாமா..?”

துணிவு

பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கும் `துணிவு’ திரைப்படத்தின் கதை இப்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தப் படத்தில், ‘மியூச்சுவல் ஃபண்ட் என்பது மோசடியான திட்டம். அதில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறார்கள் மக்கள்’ என்கிற கருத்து ஆணித்தரமாக எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விஷயம்தான் இப்போது மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுமே உண்மைக்குப் புறம்பானவை. இதில் துளியும் உண்மை இல்லை என முதலீட்டு ஆலோசகர்கள் வட்டாரத்திலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.