பெரம்பூர் பக்கத்தில் உள்ள அன்னமங்கலம் என்ற ஊரில் மணலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது ஒரு வீடு. மணல் வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், உள்ளேயுள்ளவை அனைத்தும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்தானாம். அதாவது, அனைத்தும் பழைய பொருட்களாகும். உதாரணத்துக்கு தேவையில்லாத பைப்புகளையும் பழைய இரு சக்கரவாகனத்தின் உதிரிப்பாகங்களையும் கொண்டு, கேட்டின் நுழைவு வாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேட்டை தாண்டி உள்ளே சென்றால், வாயிலின் தரைப்பகுதி முழுவதும் மண்ணை வைத்து தயார்செய்யப்பட்ட செங்கலை கொண்டு கட்டப்பட்டிருந்தது.

இதை வாசிக்கும்போதே பலருக்கும் இந்த வீட்டின் நுழைவு வாயிலே இப்படி என்றால், பிற பகுதிகள் எப்படி கட்டப்பட்டிருக்கும் என்ற ஆர்வம் எழும். எங்களுக்க்கும் இருந்தது. அதை அறிய இந்த வீட்டின் பிற பகுதிகளுடைய கட்டுமானத்தின் பின்னணி என்ன, வீட்டில் ஏதாவது குறைகள் இருக்கிறதா, இந்த வீடு கட்ட எவ்வளவு செலவானது, வீட்டின் உரிமையாளர் சொல்வதென்ன என்பதையெல்லாம் அறிய வீட்டுக்கு நேரடியாக சென்று பார்த்தோம். இந்த மணல் வீடு பற்றிய நம்முடைய குட்டி ரிவ்யூ இங்கே… இக்கட்டுரையில்!

image

வீட்டில் கேட்டை தாண்டி சில தூரம் வரையிலான தரைத்தளத்தில் ஃபினிஷிங் என்று சொல்லக்கூடிய நுனிகளில் மட்டும் சிறிது குறைபாடு காணப்பட்டது. அதைத்தாண்டி செல்கையில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான இரு மரத்தூண்கள் காணப்பட்டது. அதைத் தாண்டி நிலைக்கதவுகள். அதுகூட ஏற்கெனவே உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலானதுதான். வீட்டின் உட்புறம் நுழைகையில், வீட்டுக்கூரை அழகான முறையில் அமையப்பெற்றிருந்ததை காண முடிந்தது. இவ்வீட்டை பொறுத்த வரையில், இதன் அஸ்திவாரம் கருங்கல்லை வைத்து கட்டப்பட்டு அதன் மேல் பீம் போடப்பட்டு அதன் மேல் லிண்டல் பீம் போடப்பட்டிருந்தது.

இதற்கும் மேலாக ஸ்பிஞ்சர் பீம் போடப்பட்டிருந்தது. அதை பலப்படுத்த Die ராட் போடப்பட்டிருந்தது. அதில் அலங்காரமாய் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வீட்டை வடிவமைக்க செங்கல் உபயோகப்படுத்தப்படவில்லையாம். மாறாக க்ம்பிரஸ்டு எர்த்பிளாக் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கற்கள், களிமண்கொண்டு அத்துடன் M சாண்ட் கலந்து சிறிது சிமிண்ட் கலந்து தயாரிக்கப்பட்டதாகும். இத்தகய கற்க்கள் செய்வதற்கு குறைந்தது 20 நாட்கள் அவகாசம் தேவைப்படுமாம். அதைக்கொண்டு வீடுகள் கட்டி முடிக்க இன்னும் அதிகநாட்கள் தேவைப்படும்!

image

இவ்வீட்டின் தரைத்தளம் முழுதும் ஆக்ஸைடு மூலம் போடப்பட்டதாகும். இது உடல் நலத்துக்கு நலம் தருவதாம். இந்த வீடு குறித்து இதன் உரிமையாளர் ஜெகதீசன் நம்மிடம் பேசும்பொழுது, “இந்த வீடு கட்டும் பொழுது என் குடும்பத்தினர் யாரும் இது இந்தளவுக்கு நல்லபடியாக வருமென்று நம்பவில்லை. வீடு மழையில் கரையும் என்றார்கள். ஆனால் வீடு கட்டப்பட்ட சமயம், விடாது மழை பெய்துக்கொண்டிருந்தது. ஆனால் வீடு கரையவில்லை. அதன் பிறகு தான் அவர்களிடம் நம்பிக்கை வந்தது. வீடு கட்டி முடித்தவுடன், அனைவரும் பாராட்டினார்கள்.  அருகில் உள்ள அனைவரும் இவ்வீட்டை வந்து பார்வையிட்டு சென்றனர்” என்றார்.

வீட்டின் உள்ளே, உள்கூரை தெரக்கோட்டா கல்லால் கட்டப்பட்டது. பொதுவாக வீடு கட்டும்பொழுது வெளிச்சம் மிக அவசியம். அது இந்த வீட்டில் நிறைந்து. வீட்டின் சமயலறையில் டூம் வைத்து கட்டியிருக்கிறார்கள். மாடித்தோட்டமும் இருந்தது. அதனால் பேசுவது சத்தமாக கேட்கிறது. மொத்தத்தில் அழகான அருமையான வீடாக இந்த மண் சார்ந்த வீடு இருந்தது. இந்த வீட்டை கட்டிமுடிக்க மொத்தமே 18 லட்சம் தான் ஆனதாம்!

இந்த வீட்டின் டூரை, வீடியோ வடிவில் கீழே காணுங்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.