ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. உற்சாகத்துடன் மக்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாடங்களின் போது எந்த விதமாக சட்ட விரோத செயல்களோ அசம்பாவிதங்களோ நடைபெறுவதை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பலவிதமான கட்டுபாபடுகளை விதித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.

image

புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில், திரளாக கலந்து கொண்ட கிறிஸ்தவ பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று பிரார்த்தனையில் பங்கேற்றனர். அதேபோல் நள்ளிரவு 12 மணி அளவில் கோ பூஜையுடன் கோயில் நடைவாசல் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர், குருபகவான், துர்கை, பிரித்தியங்கரா, முருகன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட மற்ற தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக் கேக் வெட்டிய போலீசார், ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை வழங்கியும் சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் 2023 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

image

புத்தாண்டையொட்டி புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும், பேஷன் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடற்கரையில் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு பல்வேறு உடையணிந்து ரேம்ப்வாக் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை கண்டு ரசித்ததோடு, தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் புத்தாண்டை ஒட்டி மது பிரியர்கள் சுற்றுலா பயணிகள் நடனத்தை ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.